திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 102

பாயிரம்குரு மட வரலாறு

தொடர்ந்து படிக்கread this section continuously

கலந்தருள் காலாங்கர் தம்பால் அகோரர்நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்புலங்கொள் பரமானந் தர்போக தேவர்நிலந்திகழ் மூலர் நிராமயத் தோரே.

உரை

திருவருளும் குருவருளும் கலந்து அருளும் காலாங்கர் (காலாங்கி நாதர்), அனைவரையும் தம்பால் ஈர்க்கவல்ல அகோரர், நன்மைகளைத் தரும் திருமாளிகைத் தேவர், அனைத்திற்கும் தலைவனான நாதனைப் போற்றும் நாதாந்தர், புலன்களை வென்ற பரமானந்தர், போக தேவர் (போகர்), இறைவனை அடையும் வழிகளை வழங்கி மண்ணுலக உயிர்களைத் திகழச் செய்த திருமூலர், ஆகிய நாங்கள் ஏழு பேரும் இறைவனின் அருளால் என்றும் இறவா சூட்சும நிலை பெற்றவர்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    திருவருளும் குருவருளும் கலந்து அருளும் காலாங்கர் (காலாங்கி நாதர்), அனைவரையும் தம்பால் ஈர்க்கவல்ல அகோரர்,

  • வரி 2

    நன்மைகளைத் தரும் திருமாளிகைத் தேவர், அனைத்திற்கும் தலைவனான நாதனைப் போற்றும் நாதாந்தர்,

  • வரி 3

    புலன்களை வென்ற பரமானந்தர், போக தேவர் (போகர்),

  • வரி 4

    இறைவனை அடையும் வழிகளை வழங்கி மண்ணுலக உயிர்களைத் திகழச் செய்த திருமூலர், ஆகிய நாங்கள் ஏழு பேரும் இறைவனின் அருளால் என்றும் இறவா சூட்சும நிலை பெற்றவர்கள்.

திருமந்திரம் பாடல் #102

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout