திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 103

பாயிரம்திரு மும்மூர்த்திகளின் முறைமை

தொடர்ந்து படிக்கread this section continuously

அளவில் இளமையும் அந்தமும் ஈறும்அளவியல் காலமும் நாலும் உணரில்தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்அளவில் பெருமை அறியயற் காமே.

உரை

தன் இளமை அளவற்றது என்று கருதுவது இளமையின் தன்மை; அதன் முடிவாகத் தோன்றுவது முதுமை; அதற்குப்பின் வரும் வாழ்க்கையின் முடிவே இறப்பு. பிறப்புக்கு முன்பே வரையறுக்கப்பட்டு, பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் இயங்குவது காலத்தின் தன்மை; இந்த நான்கும் மாயையால் உருவாக்கப்பட்டவை என்று உணர்ந்துகொள்ளவேண்டும். அப்போது, அம்மாயையை என்றும் தளராமல் அறுக்கும் சங்கரனின் தன்மையை உணரலாம். அப்படி உணர்ந்த சிவனடியார்கள் அதை எடுத்துச் சொன்னால், அச்சொல் ஹரிக்கும் (திருமால்) அயனுக்கும் (பிரம்மன்) எட்டாத அளவு பெருமை உடையதாக இருக்கும்.

வரி வாரியாக

  • வரி 1

    தன் இளமை அளவற்றது என்று கருதுவது இளமையின் தன்மை; அதன் முடிவாகத் தோன்றுவது முதுமை; அதற்குப்பின் வரும் வாழ்க்கையின் முடிவே இறப்பு.

  • வரி 2

    பிறப்புக்கு முன்பே வரையறுக்கப்பட்டு, பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் இயங்குவது காலத்தின் தன்மை; இந்த நான்கும் மாயையால் உருவாக்கப்பட்டவை என்று உணர்ந்துகொள்ளவேண்டும்.

  • வரி 3

    அப்போது, அம்மாயையை என்றும் தளராமல் அறுக்கும் சங்கரனின் தன்மையை உணரலாம். அப்படி உணர்ந்த சிவனடியார்கள் அதை எடுத்துச் சொன்னால்,

  • வரி 4

    அச்சொல் ஹரிக்கும் (திருமால்) அயனுக்கும் (பிரம்மன்) எட்டாத அளவு பெருமை உடையதாக இருக்கும்.

திருமந்திரம் பாடல் #103

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout