திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 104

பாயிரம்திரு மும்மூர்த்திகளின் முறைமை

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்ஆதிக் கமலத் தலர்மிசை யானும்சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார்பேதித் துலகம் பிணங்குகின் றார்களே.

உரை

ஆதியிலிருந்து அனைத்திற்கும் ஆரம்பமாக இருக்கின்ற உருத்திரனும், அணிகின்ற மணிகளைப் போன்ற நீல நிறம் படைத்த திருமாலும், படைப்புத் தந்தையாக தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும் ஆகிய இவர்கள் மூவரும் யார் என்று ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் தமக்குக் கொடுக்கப்பட்ட தொழில்களில் தனிப்பட்டு நின்றாலும், அவர்களுக்குள் இருந்து இயக்கும் சிவத்தின் தொடர்ச்சியில் ஒன்றுபட்டு இருக்கிறார்கள் என்பதை உணரலாம். இதை அறியாமல் அவர்களின் தொழில்களை வைத்து வேறு வேறாகப் பிரித்து, யார் பெரியவர் யார் சிறியவர் என்று தேவையில்லாத குழப்பத்தில் உலகத்தவர்கள் தமக்குள் சண்டையிட்டு துன்பப்படுகின்றார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    ஆதியிலிருந்து அனைத்திற்கும் ஆரம்பமாக இருக்கின்ற உருத்திரனும், அணிகின்ற மணிகளைப் போன்ற நீல நிறம் படைத்த திருமாலும்,

  • வரி 2

    படைப்புத் தந்தையாக தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும் ஆகிய இவர்கள் மூவரும் யார் என்று ஆராய்ந்து பார்த்தால்,

  • வரி 3

    அவர்கள் தமக்குக் கொடுக்கப்பட்ட தொழில்களில் தனிப்பட்டு நின்றாலும், அவர்களுக்குள் இருந்து இயக்கும் சிவத்தின் தொடர்ச்சியில் ஒன்றுபட்டு இருக்கிறார்கள் என்பதை உணரலாம்.

  • வரி 4

    இதை அறியாமல் அவர்களின் தொழில்களை வைத்து வேறு வேறாகப் பிரித்து, யார் பெரியவர் யார் சிறியவர் என்று தேவையில்லாத குழப்பத்தில் உலகத்தவர்கள் தமக்குள் சண்டையிட்டு துன்பப்படுகின்றார்கள்.

திருமந்திரம் பாடல் #104

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout