திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 105

பாயிரம்திரு மும்மூர்த்திகளின் முறைமை

தொடர்ந்து படிக்கread this section continuously

ஈசன் இருக்கும் இருவினைக் கப்புறம்பீசம் உலகில் பெருந்தெய்வ மானதுஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்தூசு பிடித்தவர் தூரறிந்த் தார்களே.

உரை

இறைவன் நல்வினை தீவினை ஆகிய இரண்டுமாகவே இருக்கிறான். அதையும் தாண்டி அவனை உணர வழிசெய்யும் ஓம் எனும் பிரணவ மந்திரமே இந்த உலகின் மிகப்பெரும் தெய்வமாக இருக்கின்றது. இது எதுவும் தெரியாமல் இறைவன் அதுதான் இதுதான் என்று பல்வேறாக நினைத்துக்கொண்டு அலைபவர்கள், மும்மலங்களின் மாசு படிந்திருப்பதால் அதை அகற்றி உண்மைப் பொருளான இறைவனை உணராமலேயே இருக்கின்றார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவன் நல்வினை தீவினை ஆகிய இரண்டுமாகவே இருக்கிறான்.

  • வரி 2

    அதையும் தாண்டி அவனை உணர வழிசெய்யும் ஓம் எனும் பிரணவ மந்திரமே இந்த உலகின் மிகப்பெரும் தெய்வமாக இருக்கின்றது.

  • வரி 3

    இது எதுவும் தெரியாமல் இறைவன் அதுதான் இதுதான் என்று பல்வேறாக நினைத்துக்கொண்டு அலைபவர்கள்,

  • வரி 4

    மும்மலங்களின் மாசு படிந்திருப்பதால், அதை அகற்றி உண்மைப் பொருளான இறைவனை உணராமலேயே இருக்கின்றார்கள்.

திருமந்திரம் பாடல் #105

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout