திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 80

பாயிரம்திருமூலர்

தொடர்ந்து படிக்கread this section continuously

இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடிஇருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தேஇருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தேஇருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே.

உரை

இந்த உடலில் எண்ணிலடங்காத கோடிக்கணக்கான ஆண்டுகள் இருந்தேன். இரவு பகல் இல்லாத இடத்தில், அதாவது சூட்சும வெளியில், இருந்தேன். பல்லாயிரக்கணக்கான தேவர்களாலும் முனிவர்களாலும் சித்தர்களாலும் போற்றிப் புகழப்பெறும் இடத்தில் இருந்தேன். எம் குருநாதனுமாகிய இறைவனின் ஈடு இணையில்லாத திருவடிகளின் கீழ் அமர்ந்து இருந்தேன்.

வரி வாரியாக

  • வரி 1

    இந்த உடலில் எண்ணிலடங்காத கோடிக்கணக்கான ஆண்டுகள் இருந்தேன்.

  • வரி 2

    இரவு பகல் இல்லாத இடத்தில், அதாவது சூட்சும வெளியில், இருந்தேன்.

  • வரி 3

    பல்லாயிரக்கணக்கான தேவர்களாலும் முனிவர்களாலும் சித்தர்களாலும் போற்றிப் புகழப்பெறும் இடத்தில் இருந்தேன்.

  • வரி 4

    எம் குருநாதனுமாகிய இறைவனின் ஈடு இணையில்லாத திருவடிகளின் கீழ் அமர்ந்து இருந்தேன்.

திருமந்திரம் பாடல் #80

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout