திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 89

பாயிரம்திருமூலர்

தொடர்ந்து படிக்கread this section continuously

பெற்றமும் மானும் மழுவும் பிறிவற்றதற்பரன் கற்பனை யாகும் சராசரத்துஅற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்நற்பத மும்அளித் தான்எங்கள் நந்தியே.

உரை

காளையும் (இடபம்), மானும், மழுவும் (ஆயுதம்) தரித்துத் தானே தோன்றிய இறைவன் அவன். அவனுடைய கற்பனையிலிருந்தே (எண்ணத்திலிருந்தே) இந்த அண்டசராசரங்கள் அனைத்தும் தோன்றின. என்மேல் கொண்ட கருணையினால் உண்மைப் பொருளையும் வழங்கி, அடியவனாகிய என் தலைமேல், தன்னுடைய நன்மை தரும் பொற்பாதங்களையும் வைத்து, ஆகமங்கள் அனைத்தையும் எங்கள் நந்தியாகிய அவன் எங்களின் குருநாதராக இருந்து வழங்கினான்.

வரி வாரியாக

  • வரி 1

    காளையும் (இடபம்), மானும், மழுவும் (ஆயுதம்) தரித்துத் தானே தோன்றிய இறைவன் அவன்.

  • வரி 2

    அவனுடைய கற்பனையிலிருந்தே (எண்ணத்திலிருந்தே) இந்த அண்டசராசரங்கள் அனைத்தும் தோன்றின.

  • வரி 3

    என்மேல் கொண்ட கருணையினால் உண்மைப் பொருளையும் வழங்கி, அடியவனாகிய என் தலைமேல்,

  • வரி 4

    தன்னுடைய நன்மை தரும் பொற்பாதங்களையும் வைத்து, ஆகமங்கள் அனைத்தையும் எங்கள் நந்தியாகிய அவன் எங்களின் குருநாதராக இருந்து வழங்கினான்.

திருமந்திரம் பாடல் #89

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout