திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 90

பாயிரம்திருமூலர்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினைமாயத்தை மாமாயை தன்னில் வரும்பரைஆயத்தை அச்சிவன் தன்னை யகோசரவீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.

உரை

உணர்வினால் அறியப்பட வேண்டிய இறைவனையும், அவனை அறியும் ஞானத்தையும், உயிருக்குள் ஆன்மாவாக இருக்கும் இறைவனையும், அந்த ஆன்மாவை அறியவிடாமல் தடுக்கும் மாயையையும், அந்த மாயையை ஆளும் சிவத்தையும், இந்தச் சிவத்திலிருந்து வரும் சக்தியையும், சிவமும் சக்தியும் சேர்ந்த சதாசிவமூர்த்தியையும் தனக்குள்ளே உணர்ந்து, இறைவனை அடையும் வழிகளான ஓலி ஓளி தத்துவங்கள் அனைத்தையும் விளக்கி, யாம் வழங்கியதே இந்தத் திருமந்திர மாலை.

வரி வாரியாக

  • வரி 1

    உணர்வினால் அறியப்பட வேண்டிய இறைவனையும், அவனை அறியும் ஞானத்தையும், உயிருக்குள் ஆன்மாவாக இருக்கும் இறைவனையும்,

  • வரி 2

    அந்த ஆன்மாவை அறியவிடாமல் தடுக்கும் மாயையையும், அந்த மாயையை ஆளும் சிவத்தையும், இந்தச் சிவத்திலிருந்து வரும் சக்தியையும்,

  • வரி 3

    சிவமும் சக்தியும் சேர்ந்த சதாசிவமூர்த்தியையும் தனக்குள்ளே உணர்ந்து,

  • வரி 4

    இறைவனை அடையும் வழிகளான ஓலி ஓளி தத்துவங்கள் அனைத்தையும் விளக்கி, யாம் வழங்கியதே இந்தத் திருமந்திர மாலை.

திருமந்திரம் பாடல் #90

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout