திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 92

பாயிரம்திருமூலர்

தொடர்ந்து படிக்கread this section continuously

நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்நந்தி அருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்நந்தி அருளாலே நானிருந் தேனே.

உரை

குருநாதராகிய இறைவனின் அருளினால்தான் நான் இடையன் மூலனின் உடலில் புகுந்தேன். அதன்பிறகும் அவரின் அருளினால்தான் அந்த உடலிலேயே தவ நிலையில் இருந்து சதாசிவமாகவே மாறினேன். அவரின் அருளினால்தான் உண்மையான ஞானத்தை அடைந்து அதனுள்ளேயே உறைந்திருந்தேன். அவரின் அருளினால்தான் அவரோடே எப்போதும் இருந்தேன்.

வரி வாரியாக

  • வரி 1

    குருநாதராகிய இறைவனின் அருளினால்தான் நான் இடையன் மூலனின் உடலில் புகுந்தேன்.

  • வரி 2

    அதன்பிறகும் அவரின் அருளினால்தான் அந்த உடலிலேயே தவ நிலையில் இருந்து சதாசிவமாகவே மாறினேன்.

  • வரி 3

    அவரின் அருளினால்தான் உண்மையான ஞானத்தை அடைந்து அதனுள்ளேயே உறைந்திருந்தேன்.

  • வரி 4

    அவரின் அருளினால்தான் அவரோடே எப்போதும் இருந்தேன்.

திருமந்திரம் பாடல் #92

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout