திருமூலர் அருளிய திருமந்திரம்
குரு பாரம்பரியம்

பாயிரம் பாடல் 67–72 (6 பாடல்கள்)

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்நந்திகள் நால்வர் சிவயோக மாமுனிமன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்என்றிவர் என்னோ டெண்மரும் ஆமே.

நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்நந்தி அருளாலே மூலனை நாடினோம்நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்நந்தி வழிகாட்ட நானிருந் தேனே.

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடுஇந்த எழுவரும் என்வழி யாமே.

நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டுநால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகெனநால்வரும் தேவராய் நாதரா னார்களே.

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்செழுஞ்சுடர் முன்னொளி யாகிய தேவன்கழிந்த பெருமையைக் காட்ட கிலானே.

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்செழுந்தண் நியமங்கள் செய்மினென் றண்ணல்கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடேஅழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.

திருமந்திரம் பாடல் #67

1 / 6

0:000:00
குரு பாரம்பரியம்பாடல் 67

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout