திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 70

பாயிரம்குரு பாரம்பரியம்

தொடர்ந்து படிக்கread this section continuously

நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டுநால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகெனநால்வரும் தேவராய் நாதரா னார்களே.

உரை

மந்திரம் பெற்ற ஏழு பேர்களில் முதல் நால்வராகிய இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன் ஆகியோர், திசைக்கு ஒருவராய் நான்கு திசைகளுக்கும் நாதர்களாக இருந்தனர். குருவிடம் பெற்ற மந்திரத்துடன் அவர்களின் இறையனுபவமும் இறைவனின் அருளும் சேர்ந்து பல்வேறு பொருள்களை அவர்கள் கைக்கொண்டனர். தாங்கள் பெற்ற அருளையெல்லாம் மற்றவர்களும் பெற்று இன்புற வேண்டுமென்று அவர்கள் விரும்பினர். அவர்கள் நால்வரும் தேவர்களாகவும், மற்றவர்களுக்குக் குருநாதர்களாகவும் ஆனார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    மந்திரம் பெற்ற ஏழு பேர்களில் முதல் நால்வராகிய இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன் ஆகியோர், திசைக்கு ஒருவராய் நான்கு திசைகளுக்கும் நாதர்களாக இருந்தனர்.

  • வரி 2

    குருவிடம் பெற்ற மந்திரத்துடன் அவர்களின் இறையனுபவமும் இறைவனின் அருளும் சேர்ந்து பல்வேறு பொருள்களை அவர்கள் கைக்கொண்டனர்.

  • வரி 3

    தாங்கள் பெற்ற அருளையெல்லாம் மற்றவர்களும் பெற்று இன்புற வேண்டுமென்று அவர்கள் விரும்பினர்.

  • வரி 4

    அவர்கள் நால்வரும் தேவர்களாகவும், மற்றவர்களுக்குக் குருநாதர்களாகவும் ஆனார்கள்.

திருமந்திரம் பாடல் #70

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout