திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 68

பாயிரம்குரு பாரம்பரியம்

தொடர்ந்து படிக்கread this section continuously

நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்நந்தி அருளாலே மூலனை நாடினோம்நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்நந்தி வழிகாட்ட நானிருந் தேனே.

உரை

குருநாதராகிய நந்தியின் அருளினால்தான் யாம் 'நாதர்' என்ற பெயர் பெற்றோம். நந்தியின் அருளினால்தான், இறந்து கிடந்த இடையனாகிய மூலனைக் கண்டு அழுதுகொண்டிருந்த பசுக்களின்மேல் இரக்கம் கொண்டு, அவனின் உடலில் யாம் புகுந்தோம். நந்தியின் அருள் இல்லாவிட்டால் இந்த நாட்டில் என்ன செய்துவிட முடியும்? நந்தியின் அருளினால்தான், அவர் காட்டிய வழியின்படியே நானும் இருந்தேன்.

வரி வாரியாக

  • வரி 1

    குருநாதராகிய நந்தியின் அருளினால்தான் யாம் 'நாதர்' என்ற பெயர் பெற்றோம்.

  • வரி 2

    நந்தியின் அருளினால்தான், இறந்து கிடந்த இடையனாகிய மூலனைக் கண்டு அழுதுகொண்டிருந்த பசுக்களின்மேல் இரக்கம் கொண்டு, அவனின் உடலில் யாம் புகுந்தோம்.

  • வரி 3

    நந்தியின் அருள் இல்லாவிட்டால் இந்த நாட்டில் என்ன செய்துவிட முடியும்?

  • வரி 4

    நந்தியின் அருளினால்தான், அவர் காட்டிய வழியின்படியே நானும் இருந்தேன்.

திருமந்திரம் பாடல் #68

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout