அரன்துடி தோற்றம் அமைத்தல் திதியாம்அரன் அங்கி தன்னில் அறையிற் சங் காரம்அரன் உற்று அணைப்பில் அமரும் திரோதாயிஅரனடி என்றும் அனுக்கிரகம் என்னே.
தீத்திரன் சோதி திகழ்ஒளி உள்ஒளிகூத்தனைக் கண்டஅக் கோமளக் கண்ணினள்மூர்த்திகள் மூவர் முதல்வன் இடைசெல்லப்பார்த்தனன் வேதங்கள் பாடினள் தானே.
நந்தியை எந்தையை ஞானத் தலைவனைமந்திரம் ஒன்றுள் மருவி அதுகடந்துஅந்தர வானத்தின் அப்புறத்து அப்பரசுந்தரக் கூத்தனை என்சொல்லு மாறே.
சீய குருநந்தி திருஅம்ப லத்திலேஆயுறு மேனியை யாரும் அறிகிலர்தீயுறு செம்மை வெளுப்பொடும் அத்தன்மைஆயுறு மேனி அணைபுக லாமே.
தானான சத்தியும் தற்பரை யாய்நிற்கும்தானாம் பரற்கும் உயிர்க்கும் தரும் இச்சைஞானாதி பேதம் நடத்தும் நடித்தருள்ஆனால் அரனடி நேயத்த தாமே.
உள்ளத்துள் ஓம்என்ற ஈசன் ஒருவனைஉள்ளத்து ளேயங்கி யாய ஒருவனைஉள்ளத்து ளேநீதி யாய ஒருவனைஉள்ளத்து ளேயுடல் ஆகாய மாமே.
பெருநில மாய் அண்ட மாய்அண்டத்து அப்பால்குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன்பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன்அருநிலை யாய்நின்ற ஆதிப் பிரானே.
அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையைஉண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்ததுகொண்ட குறியைக் குலைத்தது தானே.
பயனறு கன்னியர் போகத்தின் உள்ளேபயனுறும் ஆதி பரஞ்சுடர்ச் சோதிஅயனொடு மால்அறி யாவகை நின்றிட்டுஉயர்நெறி யாய்ஒளி ஒன்றது வாமே.
அறிவுக்கு அறிவாம் அகண்ட ஒளியும்பிறிவா வலத்தினில் பேரொளி மூன்றும்அறியாது அடங்கிடும் அத்தன் அடிக்குள்பிறியாது இருக்கில் பெரும்காலம் ஆமே.
ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்துஏகாச மாசுணம் இட்டுஅங்கு இருந்தவன்ஆகாச வண்ணம் அமர்ந்துநின்று அப்புறம்ஆகாச மாய்அங்கி வண்ணனும் ஆமே.
உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்கஉயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போதுகுயில்கொண்ட பேதை குலாவி உலாவிவெயில்கொண்டு என்உள்ளம் வெளியது ஆமே.
நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்துஅணுகில் அகன்ற பெரும்பதி நந்திநணுகிய மின்னொளி சோதி வெளியைப்பணியின் அமுதம் பருகலும் ஆமே.
புறத்துளா காசம் புவனம் உலகம்அகத்துளா காசம்எம் ஆதி அறிவுசிவத்துளா காசம் செழுஞ்சுடர் சோதிசகத்துளா காசம் தானம்ச மாதியே.
மனசந் தியில்கண்ட மனநன வாகும்கனவுற ஆனந்தம் காண்டல் அதனைவினவுற ஆனந்தம் மீதொழிவுஎன்பஇனமுற்றான் நந்தி ஆனந்தம் இரண்டே.
கரியட்ட கையன் கபாலம்கை யேந்திஎரியும் இளம்பிறை சூடும்எம் மானைஅரியன் பெரியன் என்று ஆட்பட்டது அல்லால்கரியன்கொல் சேயன்கொல் காண்கின்றி லேனே.
மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன்தக்கார் உரைத்த தவநெறியே சென்றுபுக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தைநக்கார் சுழல்வழி நாடுமின் நீரே.
விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றிவிளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டிவிளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்குவிளக்குடை யான்கழல் மேவலும் ஆமே.
தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டுதத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லைதத்துவ ஞானத்தின் தன்மை அறிந்தபின்தத்துவன் அங்கே தலைப்படுந் தானே.
விசும்பொன்று தாங்கிய மெய்ஞ்ஞானத் துள்ளேஅசும்பினின்று ஊறியது ஆர்அமுது ஆகும்பசும்பொன் திகழும் படர்சடை மீதேகுசும்ப மலர்க்கந்தம் கூடிநின் றானே.
முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின்கொத்தும் பசும்பொன்னின்தூவொளி மாணிக்கம்ஒத்துஉயிர் அண்டத் துள் அமர் சோதியைஎத்தன்மை வேறென்று கூறுசெய் வீரே.
நான்என்றும் தான்என்றும் நாடினேன் நாடலும்நான்என்றும் தான்என்றும் இரண்டில்லை என்பதுநான்என்ற ஞான முதல்வனே நல்கினான்நான்என்ற நானும் நினைப்பு ஒழிந்தேனே.
ஞானத்தின் நன்னெறி நாதாந்த நன்னெறிஞானத்தின் நன்னெறி நானென்று அறிவோர்தல்ஞானத்தின் நல்யோக நன்னிலை யேநிற்றல்ஞானத்தின் நன்மோக நாதாந்த வேதமே.
உய்யவல் லார்கட்கு உயிர்சிவ ஞானமேஉய்யவல் லார்கட்கு உயிர்சிவ தெய்வமேஉய்யவல் லார்கட்கு ஒடுக்கம் பிரணவம்உய்யவல் லார்அறி வுள்அறி வாமே.
காணவல் லார்க்குஅவன் கண்ணின் மணியொக்கும்காணவல் லார்க்குக் கடலின் அமுதொக்கும்பேணவல் லார்க்கப் பிழைப்பிலன் பேர்நந்திஆணவல் லார்க்கே அவன்துணை யாமே.
ஓம்என்றும் எழுத் துள்நின்ற ஓசைபோல்மேல்நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மானடிஆய்கின்ற தேவர் அகம்படி யாமே.
எப்பாழும் பாழும் யாவுமாய் அன்றாகிமுப்பாழும் கீழுள முப்பாழும் முன்னியேஇப்பாழும் இன்னாவாறு என்பதில்லா இன்பத்துத்தற்பரஞா னானந்தர் தானது வாகுமே.
தொம்பதம் தற்பதஞ் சொன்ன துரியம்போல்நம்பிய மூன்றாம் துரியத்து நன்றாகும்அம்புவி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச்செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.
மன்னும் சத்தியாதி மணியொளி மாசோயைஅன்னதோடு ஒப்பம் இடல்ஒன்றா மாறதுஇன்னிய உற்பலம் ஒண்சீர் நிறமணம்பன்னிய சோபை பகர்ஆறும் ஆனதே.
சத்தி சிவன்பர ஞானமும் சாற்றுங்கால்உய்த்த அனந்தம் சிவமுயர் ஆனந்தம்வைத்த சொருபத்த சத்தி வருகுருஉய்த்த உடல்இவை உற்பலம் போலுமே.
உருஉற் பலநிறம் ஒண்மணம் சோபைதரநிற்ப போல்உயிர் தற்பரன் தன்னில்மருவச் சிவம்என்ற மாமுப் பதத்தின்சொரூபத்தின் சத்தியாதி தோன்றநின் றானே.
நினையும் அளவில் நெகிழ வணங்கிப்புனையில் அவனைப் பொதியலும் ஆகும்எனையும் எங்கோன்நந்தி தன்னருள் கூட்டிநினையும் அளவில் நினைப்பித் தனனே.
பாலொடு தேனும் பழத்துள் இரதமும்வாலிய பேரமு தாகும் மதுரமும்போலும் துரியம் பொடிபடி உள்புகச்சீல மயிர்க்கால் தொறும்தேக் கிடுமே.
அமரத் துவம்கடந்து அண்டம் கடந்துதமரத்து நின்ற தனிமையன் ஈசன்பவளத்து முத்தும் பனிமொழி மாதர்துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே.
மத்திமம் ஆறாறு மாற்றி மலநீக்கிச்சுத்தம தாகும் துரியத் துரிசற்றுப்பெத்த மறச்சிவ மாகிப் பிறழ்வுற்றும்சத்திய ஞா னானந்தம் சார்ந்தனன் ஞானியே.
சிவமாய் அவமான மும்மலம் தீரப்பவமான முப்பாழைப் பற்றறப் பற்றத்தவமான சத்திய ஞானானந் தத்தேதுவமார் துரியம் சொரூபம் தாமே.
பரம குரவன் பரம்எங்கு மாகித்திரமுற எங்கணும் சேர்ந்துஒழி வற்றுநிரவும் சொரூபத்துள் நீடும் சொரூபம்அரிய துரியத்து அணைந்துநின் றானே.
குலைக்கின்ற நீரின் குவலய நீரும்அலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாசம்நிலத்திடை வானிடை நீண்டகன் றானைவரைந்து வலம்செயு மாறுஅறி யேனே.
அங்குநின் றான்அயன் மால்முதல் தேவர்கள்எங்குநின் றாரும் இறைவன் என்று ஏத்துவர்தங்கிநின் றான்தனிநாயகன் எம்இறைபொங்கிநின் றான்புவ னாபதி தானே.
சமயச் சுவடும் தனையறி யாமல்சுமையற்ற காமாதி காரணம் எட்டும்திமிரச் செயலும் தெளிவுடன் நின்றோர்அமரர்க்கு அதிபதி யாகிநிற் பாரே.
மூவகைத் தெய்வத்து ஒருவன் முதல்உருவாய்அது வேறாம் அதுபோல் அணுப்பரன்சேய சிவமுத் துரியத்துச் சீர்பெறஏயும் நெறியென்று இறைநூல் இயம்புமே.
உருவன்றி யேநின்று உருவம் புணர்க்கும்கருவன்றி யேநின்று தான்கரு வாகும்அருவன்றி யேநின்ற மாயப் பிரானைக்குருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே.
உருவம் நினைப்பவர்க்கு உள்ளுறும் சோதிஉருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர்உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர்உருவம் நினைப்பவர் உலகத்தில் யாரே.
பரஞ்சோதி யாகும் பதியினைப் பற்றாப்பரஞ்சோதி என்னுள் படிந்துஅதன் பின்னைப்பரஞ்சோதி யுள்நான் படியப் படியப்பரஞ்சோதி தன்னைப் பறையக் கண்டேனே.
சொரூபம் உருவம் குணம்தொல் விழுங்கிஅரியன உற்பலம் ஆமாறு போலமருவிய சத்தியாதி நான்கும் மதித்தசொரூபக்குரவன் சுகோதயத் தானே
உரையற்ற ஆனந்த மோன சொரூபத்தின்கரையற்ற சத்தியாதி காணில் அகாரமருவுற்று உகாரம் மகாரம தாகஉரையற்ற காரத்தில் உள்ளொளி யாமே.
தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்துமுலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்துகலைநின்ற கள்வனில் கண்டுகொண் டேனே.
ஆமாறு அறிந்தேன் அகத்தின் அரும்பொருள்போமாறு அறிந்தேன் புகுமாறும் ஈதென்றேஏமாப்ப தில்லை இனியோர் இடமில்லைநாமாம் முதல்வனும் நான்என லாமே.
செற்றிலென் சீவிலென் செஞ்சாந்து அணியலென்மத்தகத் தேயுளி நாட்டி மறிக்கிலென்வித்தகன் நந்தி விதிவழி யல்லதுதத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே.
தான்முன்னம் செய்த விதிவழி தானல்லால்வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லைகோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்றுநான்முன்னம் செய்ததே நன்னில மானதே.
மூலப்பாடல் மட்டும் · original verses only



