ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதேகூறிட்டுக் கொண்டு சுமந்தறி வாரில்லைநீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியைப்பேறிட்டுஎன் உள்ளம் பிரியகில் லாவே.
வான்நின்று இடிக்கில்என் மாகடல் பொங்கிலன்கான்நின்ற செந்தீக் கலந்துடல் வேகில்என்தான்ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கிலென்நான்ஒன்றி நாதனை நாடுவன் நானே.
ஆனை துரக்கிலென் அம்பூடு அறுக்கிலென்கானத்து உழுவை கலந்து வளைக்கிலென்ஏனைப் பதியினில் என்பெரு மான்வைத்தஞானத்து உழவினை நான்உழு வேனே.
கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன்நாடு கெடினும் நமர்கெடு வாரில்லைவீடு கெடின்மற்றோர் வீடுபுக் கால்ஒக்கும்பாடது நந்தி பரிசறி வார்க்கே.
சிந்தையது என்னச் சிவனென்ன வேறில்லைசிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்சிந்தையின் உள்ளே சிவனிருந்தானே.
வாக்கும் மனமும் மறைந்த மறைபொருள்நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிதுபோக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லையாக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.
பரனாய்ப் பராபர னாகிஅப் பால்சென்றுஉரனாய் வழக்கற ஒண்சுடர் தானாய்தரனாய் தனதென ஆறுஅறி வொண்ணாஅரனாய் உலகில் அருள்புரிந் தானே.
ஓதும் மயிரக்கால் தோறும் அமு தூரியபேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்ஆதி சொரூபங்கள் மூன்றுஅகன்று அப்பாலைவேதம் ஓதும் சொரூபிதன் மேன்மையே.
உணர்வும் அவனே உயிரும் அவனேபுணரும் அவனே புலவி அவனேஇணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான்துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.
துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரும்முன்னி அவர்தம் குறையை முடித்திடும்மன்னிய கேள்வி மறையவன் மாதவன்சென்னியுள் நின்றதோர் தேற்றத்தின் ஆமே.
மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்தன்னுற்ற சோதி தலைவன் இணையிலிபொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும்என்னுற்று அறிவன்நான் என்விழித் தானே.
சத்திய ஞானத் தனிப்பொருள் ஆனந்தம்சித்தத்தின் நில்லாச் சிவானந்தப் பேரொளிசுத்தப் பிரம துரியம் துரியத்துள்உய்த்த துரியத்து உறுபே ரொளியே.
பரன்அல்ல நீடும் பராபரன் அல்லஉரன்அல்ல மீதுணர் ஒண்சுடர் அல்லதரன்அல்ல தான்அவை யாய்அல்ல வாகும்அரன்அல்ல ஆனந்தத்து அப்புறத்தானே.
முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமாசத்தியுள் நின்றோர்க்குத் தத்துவங் கூடலால்சுத்தி யகன்றொர் சுகானந்த போதரே.
துரிய அதீதம் சொல்லறும் பாழாம்அரிய துரியம் அதீதம் புரியில்விரியும் குவியும் விள்ளா மிளிரும்தன்உருவும் திரியும் உரைப்பது எவ்வாறே.
ஓதிய முத்தியடைவே உயிர்பரபேத மில் அச்சிவம் எய்தும் துரியமோடுஆதி சொரூபம் சொரூபத்த தாகவேஏதமி லாநிரு வாணம் பிறந்ததே.
பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்சுற்றற் றவர்சுற்றுக் கருதிய கண்ணுதல்சுற்றற் றவர்சுற்றி நின்றான் சோதியைப்பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரே.
காயம் பலகை கவறைந்து கண்மூன்றாய்ஆயம் பொருவதோர் ஐம்பத்தோர் அக்கரம்ஏய பெருமான்இருந்து பொருகின்றமாயக் கவற்றின் மறைப்பறி யேனே.
தூறு படர்ந்து கிடந்தது தூநெறிமாறிக் கிடக்கும் வகையறி வாரில்லைமாறிக் கிடக்கும் வகையறி வாளர்க்குஊறிக் கிடந்ததென் உள்ளன்பு தானே.
ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்சாறுபடுவன நான்கு பனையுளஏறற்கு அரியதோர் ஏணியிட்டு அப்பனைஏற்றலு றேன்கடல் ஏழுங்கண் டேனே.
வழுதலை வித்திடப் பாகன் முளைத்ததுபுழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்ததுதொழுதுகொண்டு ஓடினோர் தோட்டக் குடிகண்முழுதும் பழுத்தது வாழைக் கனியே.
ஐஎன்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர்செய்யுண்டு செய்யின் தெளிவுஅறி வாரில்லைமையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம்பொய்யொன்றும் இன்றிப் புகஎளி தாமே.
பள்ளச்செய் ஒன்றுண்டு பாடச்செய் இரண்டுளகள்ளச்செய் அங்கே கலந்து கிடந்ததுஉள்ளச்செய் அங்கே உழவுசெய் வார்கட்குவெள்ளச்செய் யாகி விளைந்தது தானே.
மூவணை ஏரும் உழுவது முக்காணிதாமணி கோலித் தறியுறப் பாய்ந்திடும்நாஅணைகோலி நடுவில் செறுஉழார்காலணை கோலிக்களர்உழு வாரே.
ஏற்றம் இரண்டுள ஏழு துரவுளமூத்தான் இறைக்க இளையான் படுத்தநீர்பாத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடில்கூத்தி வளர்த்ததோர் கோழிப்புள் ளாமே.
பட்டிப் பசுக்கள் இருபத்து நாலுளகுட்டிப் பசுக்களோர்ஏழுளு ஐந்துளகுட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும்பட்டிப் பசுவே பனவற்கு வாய்த்ததே.
ஈற்றுப் பசுக்கள் இருபத்து நாலுளஊற்றுப் பசுக்கள் ஒரு குடம் பால்போதும்காற்றுப் பசுக்கள் கறந்துண்ணுங் காலத்துமாற்றுப் பசுக்கள் வரவுஅறி யோமே.
தட்டான் அசுத்தில் தலையான மச்சின்மேல்மொட்டாய் எழுந்தது செம்பால் மலர்ந்ததுவட்டம் படவேண்டி வாய்மை மடித்திட்டுத்தட்டான் அதனைத் தகைந்துகொண் டானே.
அரிக்கின்ற நாற்றங்கால் அல்லல் கழனிதிரிக்கின்ற ஒட்டம்சிக்கெனக் கட்டிவரிக்கின்ற நல்ஆன் கறவையைப் பூட்டில்விரிக்கின்ற வெள்ளரி வித்துவித் தாமே.
இடாக்கொண்டு தூவி எருவிட்டு வித்திக்கிடாக் கொண்டு பூட்டிக் கிளறி முளையைமிடாக் கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார்கிடாக்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே.
விளைந்து கிடந்தது மேலைக்கு வித்ததுவிளைந்து கிடந்தது மேலைக்குக் காதம்விளைந்து விளைந்து விளைந்துகொள் வார்க்குவிளைந்து கிடந்தது மேவுமுக் காதமே.
களர்உழு வார்கள் கருத்தை அறியோம்களர்உழு வார்கள் கருதலும் இல்லைக்களர்உழு வார்கள் களரின் முளைத்தவளர்இள வஞ்சியின்மாய்தலும் ஆமே.
கூப்பிடு கொள்ளாக் குறுநரி கொட்டகத்துஆப்பிடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டுநாட்பட நின்று நலம்புகுந்து ஆயிழைஏற்பட இல்லத்து இனிதிருந்தானே.
மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்குலைமேல் இருந்த கொழுங்கனி வீழஉலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே.
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டுமேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவனமேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே.
ஆமாக்கள் ஐந்தும் அரியேறு முப்பதும்தேமா இரண்டொடு திப்பிலி ஒன்பதும்தாமாக் குரங்கொளில் தம்மனத் துள்ளனமூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே.
எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளைத்தெருளாத கன்னி தெறிந்திருந்து ஓதமலராத பூவின் மணத்தின் மதுவைப்பிறவாத வண்டு மணமுண்ட வாறே.
போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும்கூகின்ற நாவலின் கூழைத் தருங்கனிஆநின்ற வைங்கூழ் அவையுண்ணும் ஐவரும்வேகின்ற கூரை விருத்திபெற் றாரே.
மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டுவேம்பினில் சார்ந்து கிடந்த பனையிலோர்பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பார்இன்றிவேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே.
பத்துப் பரும்புலி யானை பதினைந்துவித்தகர் ஐவர் வினோகர் ஈ ரெண்மர்அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்அத்தலை ஐவர் அமர்ந்து நின் றாரே.
இரண்டு கடாவுண்டு இவ்வூரின் உள்ளேஇரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பின்இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கில்இரண்டு கடாவும் ஒருகடா வாமே.
ஒத்த மனக்கொல்லை உள்ளே சமன்கட்டிப்பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால்முத்தம் கயிறாக மூவர்கள் ஊரினுள்நித்தம் பொருது நிரம்பநின் றாரே.
கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்நாகையும் பூழும் நடுவில் உறைவனநாகையைக் கூகை நணுகல் உறுதலும்கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே.
குலைக்கின்ற நன்னகை யாம்கொங்கு உழக்கின்நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான்உலைக்குப் புறமெனில் ஓடும் இருக்கும்புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே.
காடுபுக் கார்இனிக் காணார் கருவெளிகூடுபுக்கு ஆனது ஐந்து குதிரையும்மூடுபுக்கு ஆனது ஆறுள ஒட்டகம்மூடு புகாவிடின் மூவனை யாமே.
கூறையும் சோறும் குழாயகத்து எண்ணெயும்காறையும் நாணும் வளையலும் கண்டவர்பாறையில் உற்ற பறக்கின்ற சீலைபோல்ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே.
துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல்விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும்வருத்திஉள் நின்ற மலையைத் தவிர்ப்பாள்ஒருத்திஉள் ளாள்அவர் ஊர்அறி யோமே.
பருந்துங் கிளியும் படுபறை கொட்டத்திருந்திய மாதர் திருமணப் பட்டார்பெருந்தவப் பூதம் போலுரு வாகும்இருந்திய பேற்றினில் இன்புறு வாரே.
கூடும் பறவை இரைகொத்தி மற்றதன்ஊடுபுக்கு உண்டி அறுக்குறில் என்ஒக்கும்சூடுஎறி நெய்யுண்டு மைகான்று இடுகின்றபாடுஅறி வார்க்குப் பயன்எளி தாமே.
இலைஇல்லை பூவுண்டு இனவண்டு இங்கில்லைதலைஇல்லை வேர்உண்டு தாள்இல்லை பூவின்குலைஇல்லை கொய்யும் மலர்உண்டு சூடும்தலைஇல்லை தாழ்ந்த கிளைபுல ராதே.
மூலப்பாடல் மட்டும் · original verses only



