அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டுநக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர்மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த்தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே.
கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இருகாதம்காப்பிடு கள்ளர் கலந்துநின் றார்உளர்காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக்கூப்பிட மீண்டதோர் கூரை கொண் டாரே.
கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடைஎட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும்கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார்எட்டிப் பழத்துக்கு இளைக்கின்ற வாறே.
பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக்குடைகொண்ட பாசத்துக் கோலம் உண் டானும்கடைவண்டு தான் உண்ணும் கண்கலந் திட்டபெடைவண்டு தான்பெற்றது இன்பமும் ஆமே.
அந்தம் கடந்தும் அதுஅது வாய்நிற்கும்பந்த உலகினில் கீழோர் பெரும் பொருள்தந்த உலகெங்கும் தானே பாராபரன்வந்து படைக்கின்ற மாண்பது வாமே.
முத்தண்ண ஈரண்ட மேமுடி ஆயினும்அத்தன் உருவம் உலகுஏ ழெனப்படும்அத்தனின் பாதாளம் அளவுள்ள சேவடிமத்தர் அதனை மகிழ்ந்துஉண ராரே.
ஆதிப் பிரான்நம் பிரான்அவ் அகலிடச்சோதிப் பிரான்சுடர் மூன்றுஒளி யாய்நிற்கும்ஆதிப் பிரான்அண்டத்து அப்புறம் கீழவன்ஆதிப் பிரான்நடு வாகிநின் றானே.
கொட்டனஞ் செய்து குளிக்கின்ற கூவலுள்வட்டனப் பூமி மருவிவந் தூறிடுங்கட்டனஞ் செய்து கயிற்றால் தொழுமியுள்ஒட்டனஞ் செய்தொளி யாவர்க்கு மாமே.
ஏழு வளைகடல் எட்டுக் குலவரையாழும் விசும்பினில் அங்கி மழைவளிதாழு மிருநிலந் தன்மை ய்துகண்டுவாழ நினைக்கில தாலய மாமே
ஆலிங் கனஞ்செய்து அகம்சுடச் சூலத்துச்சால்இங்கு அமைத்துத் தலைமை தவிர்த்தனர்கோல்இங்கு அமைத்தபின் கூபப் பறவைகள்மால்இங்கன் வைத்துஅது முன்பின் வழியே.
கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும்கொட்டுக்கும் தாலிக்கும் பாரை வலிதென்பர்கொட்டுக்கும் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே.
கயலொன்று கண்டவர் கண்டே இருப்பர்முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர்பறையொன்று பூசல் பிடிப்பான் ஒருவன்மறையொன்று கண்ட துருவம் போ லாமே.
கோரை எழுந்து கிடந்த குளத்தினில்ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்ததுநாரை படுக்கின்றாற் போலல்ல நாதனார்பாரை கிடக்கப் படிகின்ற வாறே.
கொல்லைமுக் காதமும் காடுஅரைக் காதமும்எல்லை மயங்கிக் கிடந்த இருநெறிஎல்லை மயங்காது இயங்க வல் லார்கட்குஒல்லை கடந்துசென்று ஊர்புக லாமே.
உழவொன்று வித்து ஒருங்கின காலத்துஎழுமழை பெய்யாது இருநிலச் செல்விதழுவி வினைசெய்து தான்பய வாதுவழுவாது போவன் வளர்சடை யோனே.
பதுங்கிலும் பாய்புலி பன்னிரு காதம்ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவமதுங்கிய வார்களி ஆரமுது ஊறப்பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே.
தோணியொன்று ஏறித் தொடர்ந்து கடல்புக்குவாணிபம் செய்து வழங்கி வளர்மகன்நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலைதளர்ந்துஆலிப் பழம்போல் அளிக்கின்ற அப்பே.
முக்காதம் ஆற்றிலே மூன்றுள வாழைகள்செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தனபக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர்நக்கு மலருண்டு நடுவுநின் றாரே.
அடியும் முடியும் அமைந்ததோர் ஆத்திமுடியும் நுனியின் கண் முத்தலை மூங்கில்கொடியும் படையும் கோட்சரன் ஐஐந்துமடியும் வலம்புரி வாய்த்தது அவ் வாறே.
பன்றியும் பாம்பும் பசுமுசு வானரம்தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துக்குன்றாமை கூடித் தராசின் நிறுத்தபின்குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே.
மொட்டித்து எழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக்கட்டுவிட்டு ஓடின் மலர்தலும் காணலாம்பற்றுவிட்டு அம்மனை பாழ்பட நோக்கினால்கட்டுவிட் டார்க்கு அன்றிக் காணஒண் ணாதே.
நீரின்றிப் பாயும் நிலத்தினிற் பச்சையாம்யாவரும் என்றும் அறியவல் லார்இல்லைகூரும் மழைபொழி யாது பொழிபுனல்தேரின் இந் நீர்மை திடரின்நில் லாதே.
கூகை குருந்தமது ஏறிக் குணம் பயில்மோகம் உலகுக்கு உணர்கின்ற காலத்துநாகமும் ஒன்று நடுவுரை செய்திடும்பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே.
வாழையும் சூரையும் வந்திடம் கொண்டனவாழைக்குச் சூரை வலிது வலிதென்பர்வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டுவாழை இடம்கொண்டு வாழ்கின்ற வாறே.
நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஓட்டிப்புனத்துக் குறவன் புணர்ந்த கொழுமீன்விளக்குமின் யாவர்க்கும் வேண்டிற் குறையாதுஅருத்தமும் இன்றி அடுவதும் ஆமே.
தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டான் அகத்தில்விளிப்பதோர் சங்குண்டு வேந்தணை நாடிக்களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும்அளிக்கும் பதத்தொன்று ஆய்ந்து கொள் வார்க்கே.
குடைவிட்டுப் போந்தது கோயில் எருமைபடைகண்டு மீண்டது பாதி வழியில்உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார்அடையா நெடுங்கடை ஐந்தொடு நான்கே.
போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்ஆகிப் படைத்தன ஒன்பது வாய்தலும்நாகமும் எட்டொடு நாலு புரவியும்பாகன் விடாவிடில் பன்றியும் ஆமே.
பாசி பாடர்ந்து கிடந்த குளத்திடைக்கூசி யிருக்கும் குருகு இரைதேர்ந்துண்ணும்தூசி மறவன் துணைவழி எய்திடப்பாசங் கிடந்து பதைக்கின்ற வாறே.
கும்ப மலைமேல் எழுந்ததோர் கொம்புண்டுகொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டுவம்பாய் மலர்ந்ததோர் பூவுடைப் பூவக்குள்வண்டாய்க் கிடந்து மணங்கொள்வன் ஈசனே.
வீணையும் தண்டும் விரவி இசைமுரல்தாணுவும் மேவித் தருதலைப் பெய்ததுவாணிபம் சிக்கென்று அதுஅடை யாமுன்னம்காணியும் அங்கே கலக்கின்ற வாறே.
கொங்குபுக் காரொடு வாணிபம் செய்ததுவங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வாரில்லைதிங்கள்புக்கால் இருளாவது அறிந்திலர்தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே.
போதும் புலர்fந்தது பொன்னிறங் கொண்டதுதாதவிழ் புன்னை தயங்கும் இருகரைஏதமில் ஈசன்இயங்கு நெறியிதுமாதர் இருந்ததோர் மண்டலம் தானே.
கோமுற்று அமரும் குடிகளும் தம்மிலேகாமுற்று அகத்தி இடுவர் கடைபொறும்வீவற்ற எல்லை விடாது வழிகாட்டியாமுற்ற அதட்டினால் ஐந்துண்ண லாமே.
தோட்டத்தில் மாம்பழம் தோண்டி விழுந்தக்கால்நாட்டின் புறத்தில் நரியழைத்து என்செயும்மூட்டிக் கொடுத்து முதல்வனை முன்னிட்டுகாட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.
புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப்புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப்புலம்பின் அவளொடும் போகம் நுகரும்புலம்பனுக்கு என்றும் புலர்ந்திலை போதே.
தோணி ஒன்று உண்டு துறையில் விடுவதுவாணி மிதித்துநின்று ஐவர்கோல் ஊன்றலும்வாணிபம் செய்வார் வழியிடை ஆற்றிடைஆணி கலங்கில் அதுஇது வாமே.
நின்றார் இருந்தார் கிடந்தார் எனஇல்லைசென்றார்தம் சித்தம் மோன சமாதியாம்மன்றுஏயும் அங்கே மறைப்பொருள் ஒன்றுண்டுசென்றாங்கு அணைந்தவர் சேர்கின்ற வாறே.
காட்டும் குறியும் கடந்த அக் காரணம்ஏட்டின் புறத்தில் எழுதிவைத்து என்பயன்கூட்டும் குருநந்தி கூட்டிடின் அல்லதுஆட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே.
உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும்உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லைஉணர்வுடை யார்கள் உணர்ந்த அக்காலம்உணர்வுடை யார்கள் உணர்ந்து கண் டாரே.
மறப்பது வாய்நின்ற மாயநன் னாடன்பிறப்பினை நீங்கிய பேரரு ளாளன்சிறப்பிடை யான்திரு மங்கையும் தானும்உறக்கமில் போகத்து உறங்கிடுந் தானே.
துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதிஅரிய துரியம் அதன்மீது மூன்றாய்விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தேஉரையில் அநுபூ திகத்தினுள் ளானே.
உருவிலி ஊனிலி ஊனம்ஒன்று இல்லிதிருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன்பொருவிலி பூதப் படையுடை யாளிமருவிலி வந்துஎன் மனம்புகுந் தானே.
கண்டறி வார்இல்லைக் காயத்தின் நந்தியைஎண்டிசை யோரும் இறைவன் என்று ஏத்துவர்அண்டங் கடந்த அளவிலா ஆனந்தத்தொண்டர் முகந்த துறையறி யோமே.
தற்பரம் அல்ல சதாசிவன் தான்அல்லநிட்களம் அல்ல சகள நிலையல்லஅற்புத மாகி அனுபோகக் காமம்போல்கற்பனை இன்றிக் கலந்துநின் றானே.
முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்கள்அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடியசுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே.
அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச்செப்பு பராபரம் சேர்பர மும்விட்டுக்கப்புறு சொற்பதம் மாயக் கலந்தமைஎப்படி அப்படி என்னும் அவ்வாறே.
கண்டார்க்கு அழகிது காஞ்சிரத் தின்பழம்தின்றார்க்கு அறியலாம் அப்பழத் தின்சுவைபெண்தான் நிரம்பி மடவியள் ஆனால்கொண்டான் அறிவன் குணம்பல தானே.
நந்தி யிருந்தான் நடுவுத் தெருவிலேசந்தி சமாதிகள் தாமே ஒழிந்தனஉந்தியின் உள்ளே உதித்தெழும் சோதியைப்புந்தியி னாலே புணர்ந்துகொண் டேனே.
விதறு படாவண்ணம் வேறிருந்து ஆய்ந்துபதறு படாதே பழமறை பார்த்துக்கதறிய பாழைக் கடந்ததக் கற்பனைஉதறிய பாழில் ஒடுங்குகின் றானே.
மூலப்பாடல் மட்டும் · original verses only



