திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 2949–2998

ஒன்பதாம் தந்திரம் பாடல் 2949–2998 (50 பாடல்கள்)

வாடா மலர்புனை சேவடி வானவர்கூடார் அறநெறி நாடொறும் இன்புறச்சேடார் கமலச் செழுஞ்சுடர் உட்சென்றுநாடார் அமுதுற நாடார் அமுதமே.

அதுக்கென்று இருவர் அமர்ந்த சொற் கேட்டும்பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல்சதுக்கென்று வேறே சமைந்தாரைக் காணமதுக்கொன்றைத் தாரான் வளந்தரும் அன்றே.

தானும் அழிந்து தனமும் அழிந்துநீடுஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன்வானும் அழிந்து மனமும் அழிந்துபின்நானும் அழிந்தமை நானறி யேனே.

இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப்பொருளிற் பொருளாய்ப் பொருந்தவுள் ளாகிஅருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கேஉருளாத கன்மனம் உற்றுநின் றேனே.

ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் பராபரம்ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் சிவகதிஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் உணர்வினைஒன்றிநின் றேபல ஊழிகண் டேனே.

தான்வரைவு அற்றபின் ஆரை வரைவதுதான்அவ னானபின் ஆரை நினைவதுகாமனை வென்றகண் ஆரை உகப்பதுதூமொழி வாசகம் சொல்லுமின் நீரே.

உரையற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள்கரையற்றது ஒன்றைக் கரைகாண லாகுமோதிரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்புரையற்று இருந்தான் புரிசடை யோனே.

மனமாயை மாயைஇம் மாயை மயக்கம்மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லைபினைமாய்வது இல்லை பிதற்றவும் வேண்டாதனைஆய்ந்து இருப்பது தத்துவந் தானே.

மலமில்லை மாசில்லை மானாபி மானம்குலமில்லை கொள்ளும் குணங்களும் இல்லைநலமில்லை நந்தியை ஞானத்தி னாலேபலமன்னி அன்பில் பதித்துவைப் போர்க்கே.

ஒழிந்தேன் பிறவி உறவென்னும் பாசம்கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன்அழிந்தாங்கு இனிவரும் ஆக்கமும் வேண்டேன்செழுஞ்சார் புடைய சிவனைக் கண் டேனே.

ஆலைக் கரும்பும் அமுதும்அக் காரமும்சோலைத் தண்ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப்பீலிக்கண் அன்ன வடிவுசெய் வாளொருகோலப்பெண் ணாட்குக் குறை யொன்றும் இல்லையே.

ஆராலும் என்னை அமட்டஒண் ணாதிதினிச்சீரார் பிரான்வந்தென் சிந்தை புகுந்தனன்சீராடி அங்கே திரிவதால் லால் இனியார்படுஞ் சாரா அறிவறிந் தேனே.

பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசம்தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையைஅரிந்தேன் வினையை அயில்மன வாளால்முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே.

ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும்ஒன்றுகண் டீர்உல குக்குஉயி ராவதுநன்றுகண் டீர்இனி நமசிவா யப்பழம்தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே.

சந்திரன் பாம்பொடும் சூடும் சடாதரன்வந்தென்னை யாண்ட மணிவிளக்கு ஆனவன்அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள்சிந்தையின் மேவித் தியக்கு அறுத் தானே.

பண்டுஎங்குள் ஈசன் நெடுமால் பிரமனைக்கண்டுஅங்கு இருக்கும் கருத்தறி வாரில்லைவிண்டு அங்கே தோன்றி வெறுமனம் ஆயிடில்துண்டு அங்கு இருந்ததோர் தூறுஅது வாமே.

அன்னையும் அத்தனும் அன்புற்றது அல்லதுஅன்னையும் அத்தனும் ஆரறி வார்என்னைஅன்னையும் அத்தனும் யானும் உடனிருந்துஅன்னையும் அத்தனை யான்புரிந் தேனே.

கொண்ட சுழியும் குலவரை உச்சியும்அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும்எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்துளேஉண்டனர் நானினி உய்ந்தொழிந் தேனே.

தானே திசையொடு தேவருமாய் நிற்கும்தானே வடவரை ஆதியுமாய நிற்கும்தானே உடலுயிர் தத்துவமாய் நிற்கும்தானே உலகில் தலைவனும் ஆமே.

நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்சிவன்வரின் நானுடன் போவது திண்ணம்பவம்வரும் வல்வினை பண்டே யறுத்தேன்தவம்வரும் சிந்தைத் தான்எதிராரே.

சித்தம் சிவமாய் மலமூன்றும் செற்றவர்சுத்தச் சிவமாவர் தோயார் மலபந்தம்சுத்தும் சிலகும் கலகமும் கைகாணார்சத்தம் பரவிந்து தானாம்என்று எண்ணியே.

நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்வினைப்பற்று அறுக்கும் விமலன் இருக்கும்வினைப்பற்று அறுக்கும் விமலனைத் தேடிநினைக்கப் பெறில்அவன் நீளியன் ஆமே.

சிவபெரு மான்என்று நான்அழைத்து ஏத்தத்தவப்பெரு மான்என்று தான்வந்து நின்றான்அவபெரு மான்என்னை யாளுடை நாதன்பவபெரு மானைப் பணிந்துநின் றேனே.

பணிந்துநின் றேன்பர மாதி பதியைத்துணிந்துநின் றேன்இனி மற்றொன்றும் வேண்டேன்அணிந்துநின் றேன்உடல் ஆதிப் பிரானைத்தணிந்துநின் றேன்சிவன் தன்மைகண் டேனே.

என்நெஞ்சம் ஈசன் இணையடி தாம் சேர்ந்துமுன்னம்செய்து ஏத்த முழுதும் பிறப்பறும்தன்நெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதிபின்னம்செய்து என்னைப் பிணக்கறுத் தானே.

பிணக்கறுத் தான்பிணி மூப்பறுத்து எண்ணும்கணக்கறுத் தாண்டவன் காண்நந்தி என்னைப்பிணக்கறுத்து என்னுடன் முன்வந்த துன்பம்வணக்கலுற் றேன்சிவன் வந்தது தானே.

சிவன்வந்து தேவர் குழாமுடன் கூடப்பவம்வந் திடநின்ற பாசம் அறுத்திட்டுஅவன்எந்தை ஆண்டருள் ஆதிப் பெருமான்அவன்வந்தென் னுள்ளே அகப்பட்ட வாறே.

கரும்பும் தேனும் கலந்ததோர் காயத்தில்அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம்விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே.

உள்ள சரியாதி ஒட்டியே மீட்டென்பால்வள்ளல் அருத்தியே வைத்த வளம்பாடிச்செய்வன எல்லாம் சிவமாகக் காண்டலால்கைவளம் இன்றிக் கருக்கடந் தேனே.

மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்றுதூண்டா விளக்கிக் தகளிசெய் சேர்தலும்பூண்டாள் ஒருத்தி புவன சூடாமணிமாண்டான் ஒருவன்கை வந்தது தானே.

ஆறே அருவி அகங்குளம் ஒன்றுண்டுநூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்கூறே குவிமுலை கொம்பனை யாளொடும்வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே.

அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்என்பொன் மணியை இறைவனை ஈசனைத்தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே.

மனம்வி ரிந்து குவிந்தது மாதவம்மனம்வி ரிந்து குவிந்தது வாயுமனம்வி ரிந்து குவிந்தது மன்னுயிர்மனம்வி ரிந்துரை மாண்டது முத்தியே.

மாயனை நாடி மனநெடும் தேரெறிப்போயின நாடறி யாதே புலம்புவர்தேயமும் நாடும் திரிந்தெங்கள் செல்வனைக்காயம்மின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே.

மன்னு மலைபோல் மதவா ரணத்தின்மேல்இன்னிசை பாட இருந்தவர் ஆரெனில்முன்னியல் கால முதல்வனார் நாமத்தைப்பன்னினர் என்றே பாடறி வீரே.

முத்தினின் முத்தை முகிழிள ஞாயிற்றைஎத்தனை வானோரும் ஏத்தும் இறைவனனைஅத்தனைக் காணாது அரற்றுகின் றேனையோர்பித்தன் இவனென்று பேசுகின் றாரே.

புகுந்துநின் றான்எங்கள் புண்ணிய மூர்த்திபுகுந்துநின் றான்எங்கள் போதறி வாளன்புகுந்துநின் றானடி யார்தங்கள் நெஞ்சம்புகுந்துநின் றானையே போற்றுகின் றேனே.

பூதக்கண் ணாடியில் புகுந்திலன் போதுளன்வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படுநீதிக்கண் ணாடி நினைவார் மனத்துளன்கீதக்கண் ணாடியில் கேட்டுநின் றேனே.

நாமம் ஓர் ஆயிரம் ஓதுமின் நாதனைஏமம் ஓர் ஆயிரத் துள்ளே இசைவீர்கள்ஓமம்ஓர் ஆயிரம் ஓதவல் லார்அவர்காமம் ஆயிரம் கண்டொழிந் தாரே.

போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகழ் ஞானத்தைத்தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடிசாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தைப்போற்றுகின் றேன்எம் பிரானென்று நானே.

நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியைஊனார் கமலத்தின் ஊடுசென்று அப்புறம்வானோர் உலகம் வழிபட மீண்டபின்தேனார உண்டு தெவிட்டலும் ஆமே.

வந்துநின் றான்அடி யார்கட்கு அரும்பொருள்இந்திரன் ஆதி இமையவர் வேண்டினும்சுந்தர மாதர் துழனியொன்று அல்லதுஅந்தர வானத்தின் அப்புறம் ஆமே.

மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள்எண்ணிற் கலங்கி இறைவன் இவன்என்னார்உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத்தெண்ணீர்ப் படுத்த சிவன்அவன் ஆமே.

மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக்கைத்தலம் சேர்தரு நெல்லிக் கனியொக்கும்சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள்அத்தனை நாடி அமைந் தொழிந் தேனே.

அமைந்தொழிந் தேன்அள வில்புகழ் ஞானம்சமைந் தொழிந் தேன்தடு மாற்றம்ஒன் றில்லைபுகைந் தெழும் பூதலம் புண்ணியன் நண்ணிவகைந்து கொடுக்கின்ற வள்ளலும் ஆமே.

வள்ளல் தலைவனை வானநன் னாடனைவெள்ளப் புனற்சடை வேதமுதல்வனைக்கள்ளப் பெருமக்கள் காண்பர்கொலோஎன்றுஉள்ளத்தின் உள்ளே ஒளிந்திருந்து ஆளுமே.

ஆளும் மலர்ப்பதம் தந்த கடவுளைநாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர்கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின்வாளும் மனத்தொடும் வைத்தொழிந் தேனே.

விரும்பில் அவனடி வீர சுவர்க்கம்பொருந்தில் அவனடி புண்ணிய லோகம்திருந்தில் அவனடி தீர்த்தமும் ஆகும்வருந்தி அவனடி வாழ்த்தவல் லார்க்கே.

வானகம் ஊடறுத் தான்இவ் வுலகினில்தானகம் இல்லாத் தனியாகும் போதகன்கானக வாழைக் கனிநுகர்ந்து உள்ளுறும்பானகச் சோதியைப் பற்றிநின் றேனே.

விதியது மேலை அமரர் உறையும்பதியது பாய்புனல் கங்கையும் உண்டுதுதியது தொல்வினைப் பற்றறு விக்கும்பதியது வவ்விட்டது அந்தமும் ஆமே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

ஒன்பதாம் தந்திரம்பாடல் 2949

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com