திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 2999–3047

ஒன்பதாம் தந்திரம் பாடல் 2999–3047 (49 பாடல்கள்)

மேலது வானவர் கீழது மாதவர்தானிடர் மானுடர் கீழது மாதுஅனங்கானது கூவிள மாலை கமழ்சடைஆனது செய்யும்என் ஆருயிர் தானே.

சூழுங் கருங்கடல் நஞ்சுண்ட கண்டனைஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பிலியாழுஞ் சுனையும் அடவியும் அங்குளன்வாழும் எழுந்தைந்து மன்னனும் ஆமே.

உலகமது ஒத்துமண் ஒத்ததஉயர் காற்றைஅலர்கதிர் அங்கிஓத்து ஆதிப் பிரானும்நிலவிய மாமுகில் நீர்ஒத்து மீண்டுஅச்செலவுஒத்து அமர்திகைத் தேவர் பி ரானே.

பரிசறிந்து அங்குளன் அங்கி அருக்கன்பரிசறிந்து அங்குளன் மாருதத்து ஈசன்பரிசறிந்து அங்குளன் மாமதி ஞானப்பரிசறிந்து அந்நிலம் பாரிக்கும் ஆறே.

அந்தம் கடந்தும் அதுஅது வாய்நிற்கும்பந்த உலகினில் கீழோர் பெரும் பொருள்தந்த உலகெங்கும் தானே பாராபரன்வந்து படைக்கின்ற மாண்பது வாமே.

முத்தண்ண ஈரண்ட மேமுடி ஆயினும்அத்தன் உருவம் உலகுஏ ழெனப்படும்அத்தனின் பாதாளம் அளவுள்ள சேவடிமத்தர் அதனை மகிழ்ந்துஉண ராரே.

ஆதிப் பிரான்நம் பிரான்அவ் அகலிடச்சோதிப் பிரான்சுடர் மூன்றுஒளி யாய்நிற்கும்ஆதிப் பிரான்அண்டத்து அப்புறம் கீழவன்ஆதிப் பிரான்நடு வாகிநின் றானே.

அண்டம் கடந்துஉயர்ந்து ஓங்கும் பெருமையன்பிண்டம் கடந்த பிறவிச் சிறுமையன்தொண்டர் நடந்த கனைகழல் காண்டொறும்தொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் றானே.

உலவுசெய் நோக்கம் பெருங்கடல் சூழநிலம்முழுது எல்லாம் நிறைந்தனன் ஈசன்பலம்முழுது எல்லாம் படைத்தனன் முன்னேபுலம்முழு பொன்னிற மாகிநின் றானே.

பராபர னாகிப் பல்லூழிகள் தோறும்பராபர னாய்இவ் அகலிடம் தாங்கித்தராபர னாய்நின்ற தன்மை யுணரார்நிராபர னாகி நிறைந்துநின் றானே.

போற்றும் பெருந்தெய்வம் தானே பிறரில்லைஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்வேற்றுடல் தானென்றும் அதுபெருந் தெய்வமாம்காற்றது ஈசன் கலந்து நின்றானே.

திகையனைத் தும்சிவ னேஅவ னாகின்மிகையனைத் தும்சொல்ல வேண்டா மனிதரேபுகையனைத் தும்புறம் அங்கியிற் கூடுமுகையனைத் தும்எங்கள் ஆதிப் பிரானே.

அகன்றான் அகலிடம் ஏழும்ஒன்றாகிஇவன்தான் எனநின்று எளயனும் அல்லன்சிவன்தான் பலபல சீவனு மாகிநவின்றான் உலகுறு நம்பனும் ஆமே.

கலையொரு மூன்றும் கடந்தப்பால் நின்றதலைவனனை நாடுமின் தத்துவ நாதன்விலையில்லை விண்ணவ ரோடும் உரைப்பஉரையில்லை உள்ளுறும் உள்ளவன் தானே.

படிகால் பிரமன்செய் பாசம் அறுத்துநெடியான் குறுமைசெய் நேசம் அறுத்துச்செடியார் தவத்தினில் செய்தொழில் நீக்கிஅடியேனை உய்யவைத்து அன்புகொண் டானே.

ஈசனென்று எட்டுத் திசையும் இயங்கினஓசையில் நின்றெழு சத்தம் உலப்பிலிதேசமொன்று ஆங்கே செழுங்கண்டம் ஒன்பதும்வாச மலர்போல் மருவி நின் றானே.

இல்லனும் அல்லன் உளன் அல்லன் எம்இறைநல்லது நெஞ்சம் பிளந்திடும் காட்சியன்தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணிசொல்லரும் சோதி தொடர்ந்துநின் றானே.

உள்ளத் தொடுங்கும் புறத்துளும் நானெனும்கள்ளத் தலைவன் கமழ்சடை நந்தியும்வள்ளற்பெருமை வழக்கஞ்செய் வார்கள்தம்அள்ளற் கடலை அறுத்துநின் றானே.

மாறெதிர் வானவர் தானவர் நாடொறும்கூறுதல் செய்து குரைகழல் நாடுவர்ஊறுவர் உள்ளத்து அகத்தும் புறுத்துளும்வேறுசெய்து ஆங்கே விளக்கொளி யாமே.

விண்ணிலும் வந்த வெளியிலன் மேனியன்கண்ணிலும் வந்த புலனல்லன் காட்சியன்பண்ணினில் வந்த பயனல்லன் பான்மையன்எண்ணில் ஆ னந்தமும் எங்கள் பிரானே.

உத்தமன் எங்கும் உகக்கும் பெருங்கடல்நித்திலச் சோதியன் நீலக் கருமையன்எத்தனை காலமும் எண்ணுவர் ஈசனைச்சித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரே.

நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன்அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம்மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம்புறம்பல காணினும் போற்றகி லாரே.

இங்குநின் றான்அங்கு நின்றனன் எங்குளன்பொங்கிநின் றான்புவ னாபதி புண்ணியன்கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறுஎங்குநின் றான்மழை போல்இறை தானே.

உணர்வது வாயுவே உத்தம மாயும்உணர்வது நுண்ணறிவு எம்பெரு மானைப்புணர்வது வாயும் புல்லிய தாயும்உணர்வுடல் அண்டமும் ஆகிநின் றானே.

தன்வலி யால்உல கேழும் தரித்தவன்தன்வலி யாலே அணுவினும் தான்நொய்யன்தன்வலி யால்மலை எட்டினும் தான்சாரான்தன்வலி யாலே தடம்கட லாமே.

ஏனோர் பெருமையன் ஆகிலும் எம்இறைஊனே சிறுமையும் உட்கலந்து அங்குளன்வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்தானே அறியும் தவத்தின் அளவே.

பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளைக்குண்டாலம் காயத்துக் குதிரை பழுத்ததுஉண்டனர் உண்டார் உணர்விலா மூடர்கள்பிண்டத்துஉட் பட்டுப் பிணங்குகின்றார்களே.

ஏயும் சிவபோகம் ஈதன்றி ஓரொளிஆயும் அறிவையும் மாயா உபாதியால்ஏய பரிய புரியும் தனதுஎய்தும்சாயும் தனது வியாபகம் தானே.

நான்அறிந்து அப்பொருள் நாடஇடம் இல்லைநான்அறிந்து அங்கே வழியுற விம்மிடும்ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்தான்அறிந்து அங்கும் தலைப்பட லாமே

கடலிடை வாழ்கின்ற கௌவை உலகத்துஉடலிடை வாழ்வுகொண்டு உள்ளொளி நாடிஉடலிடை வைகின்ற உள்ளுறு தேவனைக்கடலின் மலிதிரைக் காணலும் ஆமே.

பெருஞ்சுடர் மூன்றினும் உள்ளொளி யாகித்தெரிந்துட லாய் நிற்கும் தேவர் பிரானும்இருஞ்சுடர் விட்டிட்டு இகலிடம் எல்லாம்பரிந்துடன் போகின்ற பல்கோரை யாமே.

உறுதியின் உள்வந்த உள்வினைப் பட்டுஇறுதியின் வீழ்ந்தார் இரணமது ஆகும்சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்திபெறுதியின் மேலோர் பெருஞ்சுட ராமே.

பற்றி னுள்ளே பரமாய பரஞ்சுடர்முற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்றொளிநெற்றியின் உள்ளே நினைவாய் நிலைதருமற்றவ னாய்னி ன்ற மாதவன் தானே.

தேவனும் ஆகும் திசைதிசை பத்துளும்ஏவனும் ஆம்விரி நீருலகு ஏழையும்ஆவனு மாம் அமர்ந்து எங்கும் உலகினும்நாவனும் ஆகி நவிற்றுகின் றானே.

நோக்கும் கருடன் நொடிஏழ் உலகையும்காக்கும் அவனித் தலைவனும் அங்குளநீக்கும் வினைஎன் நிமலன் பிறப்பிலிபோக்கும் வரவும் புணரல் லானே.

செழுஞ்சடை யன் செம்பொ னேயொக்கும் மேனிஒழிந்தன னாயும் ஒருங்குடன் கூடும்கழிந்திலன் எங்கும் பிறப்பிலன் ஈசன்ஒழிந்திலகு ஏழுலகு ஒத்துநின் றானே.

உணர்வும் அவனே உயிரும் அவனேபுணர்வும் அவனே புலனும் அவனேஇணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான்துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.

புலமையின் நாற்றமில் புண்ணியன் எந்தைநலமையின் ஞான வழக்கமும் ஆகும்விலமையில் வைத்துள் வேதியர் கூறும்பலமையில் எங்கும் பரந்துநின் றானே.

விண்ணவ னாய்உலகு ஏழுக்கு மேலுளன்மண்ணவ னாய்வலம் சூழ்கடல் ஏழுக்கும்தண்ணவன் ஆயது தன்மையின் நிற்பதோர்கண்ணவ னாகிக் கலந்துநின் றானே.

நின்றனன் மாலொடு நான்முகன் தானாகிநின்றனன் தான்நிலம் கீழொடு மேலெனநின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல்நின்றனன் தானே வளங்கனி யாயே.

புவனா பதிமிகு புண்ணியன் எந்தைஅவனே உலகில் அடர்பெரும் பாகன்அவனே அரும்பல சீவனும் ஆகும்அவனே இறையென மாலுற்ற வாறே.

உண்ணின்று ஒளிரும் உலவாப் பிராணனும்விண்ணின்று இயங்கும் விரிகதிர்ச் செல்வனும்மண்ணின்று இயங்கும் வாயுவு மாய் நிற்கும்கண்ணின்று இயங்கும் கருத்தவன் தானே.

எண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழிப்பண்ணும் திறனும் படைத்த பரமனைக்கண்ணிற் கவரும் கருத்தில் அதுஇதுஉண்ணின்று உருக்கியோர் ஆயமும் ஆமே.

இருக்கின்ற எண்டிசை அண்டம்பா தாளம்உருக்கொடு தன்னடு ஒங்கஇவ்வண்ணம்கருக்கொடு எங்கும் கலந்திருந் தானேதிருக்கொன்றை வைத்த செழுஞ்சடை யானே.

பலவுடன் சென்றஅப் பார்முழுது ஈசன்செலவுஅறி வார்இல்லை சேயன் அணியன்அலைவிலன் சங்கரன் ஆதிஎம் ஆதிபலவில தாய் நிற்கும் பான்மைவல் லானே.

அதுஅறி வானவன் ஆதிப் புராணன்எதுஅறி யாவகை நின்றவன் ஈசன்பொதுஅது வான புவனங்கள் எட்டும்இதுஅறி வானநந்தி எங்கள் பிரானே.

நீரும் நிலனும் விசும்புஅங்கி மாருதம்தூரும் உடம்புறு சோதியு மாய் உளன்பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்இறைஊரும் சகலன் உலப்பிலி தானே.

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்மூலன் உரைசெய்த முன்னூறு மந்திரம்மூலன் உரைசெய்த முப்பது உபதேசம்மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே.

வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடிவாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

ஒன்பதாம் தந்திரம்பாடல் 2999

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com