ஆயத்துள் நின்ற அறுசமை யங்களுங்காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலாமாயக் குழியில் விழுவர் மனைமக்கள்பாசத்துட் பட்டுப் பதைக்கின்ற வாறே.
உள்ளத்து ளேதானுகந் தெங்கு நின்றவன்வள்ளற் றலைவன் மலருறை மாதவன்பொள்ளற் குரம்பை புகுந்து புறப்படுங்கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே.
உள்ளத்து முள்ளன் புறத்துள னென்பவர்க்குள்ளத்து முள்ளன் புறத்துள னெம்மிறையுள்ளத்து மில்லைப் புறத்தில்லை யென்பவர்க்குள்ளத்து மில்லைப் புறத்தில்லைத் தானே.
ஆறு சமையமுங் கண்டவர் கண்டிலராறு சமையப் பொருளும் பயனில்லைத்தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்மாறுத லின்றி மனைபுக லாமே.
சிவமல்ல தில்லை யிறையோ சிவமாந்தவமல்ல தில்லைத் தலைப்படு வோர்க்கிங்கவமல்ல தில்லை யறுசமை யங்கள்தவமல்ல நந்திதாள் சார்ந்துய் யீரே.
அண்ணலை நாடிய வாறு சமையமும்விண்ணவ ராக மிகவும் விரும்பியேமுன்னின் றழியு முயன்றில ராதலால்மண்ணின் றொழியும் வகையறி யார்களே.
சிவகதி யேகெதி மற்றுள்ள தெல்லாம்பவகதிப் பாசப் பிறவியொன் றுண்டுதவகதி தன்னோடு நேரொன்று தோன்றிலவகதி மூவரு மவ்வகை யாமே.
நூறு சமைய முளவால் நுகருங்காலாறு சமைய மவ்வாறுட் படுவனகூறு சமையங்கள் கொண்ட நெறிநில்லாநீறு பரநெறி யில்லாநெறி நின்றே.
கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள்சுத்த சிவனெங்குந் தோய்வுற்று நிற்கின்றான்குத்தந் தெரியார் குணங்கொண்டு கோதாட்டார்பித்தேறி நாளும் பிறந்திறப் பாரே.
மயங்கு கின்றாரு மதைத் தெளிந்தாருமுயங்கி யிருவினை மூழை முகப்பாயியங்கிப் பெறுவாரே லீறதுக் காட்டிப்பயங்கெட் டவர்க்கோர் பரநெறி யாமே.
சேய னணியன் பிணியிலன் பேர்நந்திதூயன் றுளக்கற நோக்கவல் லார்கட்குமாயன் மயக்கிய மானிட ராமவர்காய மிளைக்குங் கருத்தறியார் களே.
வழியிரண் டுக்குமோர் வித்தது வானகழியது பார்மிசை வாழ்த லுறுதல்சுழியறி வாளன்றன் சொல்வழி முன்னின்றழிவறி வார்நெறி நாடகில் லாரே.
மாதவர்க் கெல்லா மாதேவர் பிரானென்பர்நாதம தாகி யறியப் படுநந்திபேதஞ் செய்யாதே பிரானென்று கைதொழிலாதியு மன்னெறி யாகிநின் றானே.
அரனெறி யப்பனை யாதிப் பிரானையுரநெறி யாகிவந் துள்ளம் புகுந்தான்பரனெறி தேடிய பத்தர்கள் சித்தம்பரனறி யாவிடிற் பல்வகை தூரமே.
பரிசறி வானவர் பண்பன் பகலோன்பெரிசறி வானவர் பேரிற் றிகழுந்துரிசற நீநினை தூய்மணி வண்ணனரிதவன் வைத்த வரனெறி தானே.
ஆன சமைய மதுவிது நன்றெனுமாய மனிதர் மயக்க மதுவொழிகானங் கடந்த கடவுளை நாடுமினூனங் கடந்த வுருவது வாமே.
அன்னெறி நாடி யமரர் முனிவருஞ்சென்னெறி கண்டார் சிவனெனப் பெற்றபின்முன்னெறி நாடி முதல்வ னருளிலார்சென்னெறி செல்லார் திகைக்கின்ற வாறே.
உறுமா றறிவது முண்ணின்ற சோதிபெறுமா றறியிற் பிணக்கொன்று மில்லையறுமா றதுவான தங்கியு ளாங்கேயிறுமா றறிகில ரேழைக டாமே.
வழிநடக் கும்பரி சொன்றுண்டு வையங்கழிநடக் குண்டவர் கற்பனை கேட்பர்சுழிநடக் குந்துய ரம்மது நீக்கிப்பழிநடப் பார்க்குப் பரவலு மாமே.
வழிசென்று மாதவம் வைகின்ற போதுபழிசெல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கேவழிசெல்லும் வல்வினை யார்திறம் விட்டிட்டுழிசெல்லி லும்பர் தலைவன்முன் னாமே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #1530
1 / 20




