தொடர்ந்து படிக்கread this section continuously
ஆன சமைய மதுவிது நன்றெனுமாய மனிதர் மயக்க மதுவொழிகானங் கடந்த கடவுளை நாடுமினூனங் கடந்த வுருவது வாமே.
உரைmeaning
பலரால் சொல்லப்படுவதான சமயங்களில் அதுவும் நல்லது இதுவும் நல்லது என்று பல விதமான சமயங்களைப் பற்றிச் சொல்லி, மற்றவர்களை ஏமாற்றிப் பிழைக்கின்ற மனிதர்கள் உங்களை மயக்கிவிட முயற்சி செய்வார்கள். அதில் சென்று மயங்குவதை ஒழித்துவிட்டு, நாதங்களைக் கடந்து நிற்கின்ற இறைவனைத் தேடுங்கள். அவ்வாறு தேடினால், அழிவைக் கடந்து நிற்கின்ற, என்றும் அழியாத உருவமாகிய இறைவனைக் காணலாம்.
Speaking of many kinds of religion among those that many people speak of, saying this one too is good and that one too is good, people who live by deceiving others will try to bewilder you. Put away going to them and being bewildered, and seek the God who stands beyond the sounds. If you seek him so, you may see God, the form that never perishes, who stands beyond all perishing.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பலரால் சொல்லப்படுவதான சமயங்களில் அதுவும் நல்லது இதுவும் நல்லது என்று பல விதமான சமயங்களைப் பற்றிச் சொல்லி,
Speaking of many kinds of religion among those that many people speak of, saying this one too is good and that one too is good,
- வரி 2Line 2
மற்றவர்களை ஏமாற்றிப் பிழைக்கின்ற மனிதர்கள் உங்களை மயக்கிவிட முயற்சி செய்வார்கள்; அதில் சென்று மயங்குவதை ஒழித்துவிடுங்கள்.
people who live by deceiving others will try to bewilder you; put away going to them and being bewildered.
- வரி 3Line 3
நாதங்களைக் கடந்து நிற்கின்ற இறைவனைத் தேடுங்கள்.
Seek the God who stands beyond the sounds.
- வரி 4Line 4
அவ்வாறு தேடினால், அழிவைக் கடந்து நிற்கின்ற, என்றும் அழியாத உருவமாகிய இறைவனைக் காணலாம்.
If you seek him so, you may see God, the form that never perishes, who stands beyond all perishing.
திருமந்திரம் பாடல் #1545





