திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1544

ஐந்தாம் தந்திரம்21. புறச் சமய நிந்தனை

தொடர்ந்து படிக்கread this section continuously

பரிசறி வானவர் பண்பன் பகலோன்பெரிசறி வானவர் பேரிற் றிகழுந்துரிசற நீநினை தூய்மணி வண்ணனரிதவன் வைத்த வரனெறி தானே.

உரை

கிடைப்பதற்கு மேலான பரிசு அவனே என்று அறிந்துகொண்ட தேவர்களுக்குப் பெருங் கருணையோடு அருளுபவனும், பிரகாசமான சூரியனைப் போல் வெளிச்சத்தைக் கொடுத்து வழிகாட்டுபவனும், அடையக்கூடிய அனைத்தையும்விடப் பெரியவன் அவனே என்று அறிந்துகொண்ட தேவர்கள் அழைக்கின்ற பலவிதமான பெயர்களிலும் அப்படியே திகழ்பவனும் ஆகிய இறைவனை, ஒரு குற்றமும் இல்லாமல் சாதகர்கள் நினைத்து வழிபட்டால், தூய்மையான மாணிக்கத்தில் நுழைகின்ற வெளிச்சம் அப்படியே எதிரொலிப்பதுபோல, அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ற தன்மையைக் கொடுத்து வழிகாட்டி அருளுகின்றான். சாதகர்களைக் காத்து அருளுகின்ற இறைவனை அடைகின்ற வழிமுறைகளே, கிடைப்பதற்கு மிகவும் அரியதாக அவன் வகுத்துக் கொடுத்து அருளிய வழிமுறைகள் ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    கிடைப்பதற்கு மேலான பரிசு அவனே என்று அறிந்துகொண்ட தேவர்களுக்குப் பெருங் கருணையோடு அருளுபவனும், பிரகாசமான சூரியனைப் போல் வெளிச்சத்தைக் கொடுத்து வழிகாட்டுபவனும்,

  • வரி 2

    அடையக்கூடிய அனைத்தையும்விடப் பெரியவன் அவனே என்று அறிந்துகொண்ட தேவர்கள் அழைக்கின்ற பலவிதமான பெயர்களிலும் அப்படியே திகழ்பவனும் ஆகிய இறைவனை,

  • வரி 3

    ஒரு குற்றமும் இல்லாமல் சாதகர்கள் நினைத்து வழிபட்டால், தூய்மையான மாணிக்கத்தில் நுழைகின்ற வெளிச்சம் அப்படியே எதிரொலிப்பதுபோல, அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ற தன்மையைக் கொடுத்து வழிகாட்டி அருளுகின்றான்.

  • வரி 4

    சாதகர்களைக் காத்து அருளுகின்ற இறைவனை அடைகின்ற வழிமுறைகளே, கிடைப்பதற்கு மிகவும் அரியதாக அவன் வகுத்துக் கொடுத்து அருளிய வழிமுறைகள் ஆகும்.

திருமந்திரம் பாடல் #1544

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout