திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1543

ஐந்தாம் தந்திரம்21. புறச் சமய நிந்தனை

தொடர்ந்து படிக்கread this section continuously

அரனெறி யப்பனை யாதிப் பிரானையுரநெறி யாகிவந் துள்ளம் புகுந்தான்பரனெறி தேடிய பத்தர்கள் சித்தம்பரனறி யாவிடிற் பல்வகை தூரமே.

உரை

தங்களைக் காத்து அருளுகின்ற வழிமுறையில் அப்பனாகவும், ஆதிப் பரம்பொருளாகவும், அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்ற இறைவனே, தங்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்து முயற்சி செய்யவைக்கின்ற வழிமுறைகளாகவே ஆகி வந்து, தங்களின் உள்ளத்திற்குள் புகுந்து வீற்றிருப்பான். பரம்பொருளை அடைகின்ற வழிமுறைகளைத் தேடி அலைகின்ற பக்தர்கள், தங்களின் எண்ணத்தினால் அந்தப் பரம்பொருளை அறிந்துகொள்ளாமல் போய்விட்டால், இறைவனும் அவர்களால் நெருங்க முடியாத அளவிற்குத் தூரமாகவே இருப்பான்.

வரி வாரியாக

  • வரி 1

    தங்களைக் காத்து அருளுகின்ற வழிமுறையில் அப்பனாகவும், ஆதிப் பரம்பொருளாகவும், அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்ற இறைவனே,

  • வரி 2

    தங்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்து முயற்சி செய்யவைக்கின்ற வழிமுறைகளாகவே ஆகி வந்து, தங்களின் உள்ளத்திற்குள் புகுந்து வீற்றிருப்பான்.

  • வரி 3

    பரம்பொருளை அடைகின்ற வழிமுறைகளைத் தேடி அலைகின்ற பக்தர்கள், தங்களின் எண்ணத்தினால்

  • வரி 4

    அந்தப் பரம்பொருளை அறிந்துகொள்ளாமல் போய்விட்டால், இறைவனும் அவர்களால் நெருங்க முடியாத அளவிற்குத் தூரமாகவே இருப்பான்.

திருமந்திரம் பாடல் #1543

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout