திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1542

ஐந்தாம் தந்திரம்21. புறச் சமய நிந்தனை

தொடர்ந்து படிக்கread this section continuously

மாதவர்க் கெல்லா மாதேவர் பிரானென்பர்நாதம தாகி யறியப் படுநந்திபேதஞ் செய்யாதே பிரானென்று கைதொழிலாதியு மன்னெறி யாகிநின் றானே.

உரை

மாபெரும் தவங்களைச் செய்தவர்கள் அனைவரும், தாம் தமக்குள் உணர்ந்த இறைவனை, மாபெரும் தேவர்களுக்கெல்லாம் தலைவன் என்று கூறுவார்கள். அந்த இறைவனைச் சாதகர்கள் தமக்குள் நாத வடிவமாக ஆகி அறியப்படுகின்ற நந்தி எனும் பெயரால் குருநாதனாக இருந்து வழிகாட்டும்போது, அவனை வேறு யாராகவும் பிரித்து எண்ணிப் பார்க்காமல், எமது தலைவன் இவனே என்று எண்ணிக்கொண்டு, தம்மால் இயன்ற வழியில் அவனை அடைவதற்கு முயற்சி செய்தால், ஆதிப் பரம்பொருளாக இருக்கின்ற அந்த இறைவனும் தாங்கள் முயன்ற அந்த வழியாகவே ஆகி நிற்கின்றான்.

வரி வாரியாக

  • வரி 1

    மாபெரும் தவங்களைச் செய்தவர்கள் அனைவரும், தாம் தமக்குள் உணர்ந்த இறைவனை, மாபெரும் தேவர்களுக்கெல்லாம் தலைவன் என்று கூறுவார்கள்.

  • வரி 2

    அந்த இறைவனைச் சாதகர்கள் தமக்குள் நாத வடிவமாக ஆகி அறியப்படுகின்ற நந்தி எனும் பெயரால் குருநாதனாக இருந்து வழிகாட்டும்போது,

  • வரி 3

    அவனை வேறு யாராகவும் பிரித்து எண்ணிப் பார்க்காமல், எமது தலைவன் இவனே என்று எண்ணிக்கொண்டு, தம்மால் இயன்ற வழியில் அவனை அடைவதற்கு முயற்சி செய்தால்,

  • வரி 4

    ஆதிப் பரம்பொருளாக இருக்கின்ற அந்த இறைவனும் தாங்கள் முயன்ற அந்த வழியாகவே ஆகி நிற்கின்றான்.

திருமந்திரம் பாடல் #1542

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout