தொடர்ந்து படிக்கread this section continuously
வழியிரண் டுக்குமோர் வித்தது வானகழியது பார்மிசை வாழ்த லுறுதல்சுழியறி வாளன்றன் சொல்வழி முன்னின்றழிவறி வார்நெறி நாடகில் லாரே.
உரைmeaning
இறைவனை அடையும் முக்திக்கு வழி என்று அறிந்து செல்பவர்களுக்கும், இறைவனை அடைவதற்கான வழி எது என்று அறியாமலேயே செல்பவர்களுக்கும் ஆகிய, இரண்டு வழியில் செல்பவர்களுக்கும், ஒரே மூல விதையாக அவர்களுக்குள் இருப்பது ஒன்று இருக்கின்றது. இந்த உலகத்தின் மேல் வாழ்வதும், கர்மங்களை அனுபவிப்பதும் ஆகிய இரண்டிலிருந்தும் விடுதலை பெறுவதற்கு, அனைத்தும் அறிந்தவனாகிய இறைவனே குருவாக இருந்து சொல்லி அருளுகின்ற வழியை, முயற்சி செய்து விட்டுவிடாமல் கடைப்பிடிக்க வேண்டும். அதன் மூலம் கர்மங்கள் அனைத்தும் அழிந்துபோவதை அறிந்துகொண்டவர்களின் வழிமுறையைத் தேடி அடைவதற்கு முயற்சி செய்யாமலேயே, ஆசைகளின் வழியே அவர்கள் சென்றுகொண்டிருக்கின்றார்கள்.
For those who go knowing which is the way to the liberation of reaching God, and for those who go without knowing at all which is the way to reach God, that is, for those who go along the two ways alike, there is one thing that stands within them as the single root seed. To gain release from both of these, from living upon this earth and from undergoing karmas, one must strive and follow, without ever letting it go, the way that God himself, who knows all, stands as guru and graciously tells. But without even striving to seek out and reach the discipline of those who have thereby come to know that all karmas perish, they go on along the way of their desires.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவனை அடையும் முக்திக்கு வழி என்று அறிந்து செல்பவர்களுக்கும், இறைவனை அடைவதற்கான வழி எது என்று அறியாமலேயே செல்பவர்களுக்கும் ஆகிய, இரண்டு வழியில் செல்பவர்களுக்கும், ஒரே மூல விதையாக அவர்களுக்குள் இருப்பது ஒன்று இருக்கின்றது.
For those who go knowing which is the way to the liberation of reaching God, and for those who go without knowing at all which is the way to reach God, that is, for those who go along the two ways alike, there is one thing that stands within them as the single root seed.
- வரி 2Line 2
இந்த உலகத்தின் மேல் வாழ்வதும், கர்மங்களை அனுபவிப்பதும் ஆகிய இரண்டிலிருந்தும் விடுதலை பெறுவதற்கு,
To gain release from both of these, from living upon this earth and from undergoing karmas,
- வரி 3Line 3
அனைத்தும் அறிந்தவனாகிய இறைவனே குருவாக இருந்து சொல்லி அருளுகின்ற வழியை, முயற்சி செய்து விட்டுவிடாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
one must strive and follow, without ever letting it go, the way that God himself, who knows all, stands as guru and graciously tells.
- வரி 4Line 4
அதன் மூலம் கர்மங்கள் அனைத்தும் அழிந்துபோவதை அறிந்துகொண்டவர்களின் வழிமுறையைத் தேடி அடைவதற்கு முயற்சி செய்யாமலேயே, ஆசைகளின் வழியே அவர்கள் சென்றுகொண்டிருக்கின்றார்கள்.
But without even striving to seek out and reach the discipline of those who have thereby come to know that all karmas perish, they go on along the way of their desires.
திருமந்திரம் பாடல் #1541





