திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1540

ஐந்தாம் தந்திரம்21. புறச் சமய நிந்தனை

தொடர்ந்து படிக்கread this section continuously

சேய னணியன் பிணியிலன் பேர்நந்திதூயன் றுளக்கற நோக்கவல் லார்கட்குமாயன் மயக்கிய மானிட ராமவர்காய மிளைக்குங் கருத்தறியார் களே.

உரை

நிலையான மனம் இல்லாதவர்களுக்குத் தூரத்தில் இருந்து அருளுபவனும், நிலையான மனம் உடையவர்களுக்கு அருகிலே இருப்பவனும், இந்த இரு நிலையில் இருப்பவர்களின் மேலும் பற்று இல்லாதவனும், பெயரில் நந்தி என்று அழைக்கப்படும் இறையே குரு என்ற நிலையில் இருப்பவனும், தூய்மையானவனும் ஆகிய இறைவனை, அசைவு இல்லாத மனத்துடன் தமக்குள்ளேயே பார்க்க முடிந்தவர்களுக்கு அவ்வாறெல்லாம் இருக்கின்றான் இறைவன். அவ்வாறு பார்க்க முடியாமல் இருக்கின்ற மனிதர்களாகிய மற்றவர்கள் அனைவருக்கும் அவன் மாயனாகவே இருந்து மாயையில் மயக்கி வைத்திருப்பதால், அவர்கள் அனைவரும் தம்முடைய உடலின் மேல் இருக்கின்ற பற்றைக் குறைத்து, உடலுக்குள் இருக்கின்ற ஆன்மாவை அறிந்துகொள்ளுகின்ற முறையை அறியாமல் இருக்கின்றார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    நிலையான மனம் இல்லாதவர்களுக்குத் தூரத்தில் இருந்து அருளுபவனும், நிலையான மனம் உடையவர்களுக்கு அருகிலே இருப்பவனும், இந்த இரு நிலையில் இருப்பவர்களின் மேலும் பற்று இல்லாதவனும், பெயரில் நந்தி என்று அழைக்கப்படும் இறையே குரு என்ற நிலையில் இருப்பவனும்,

  • வரி 2

    தூய்மையானவனும் ஆகிய இறைவனை, அசைவு இல்லாத மனத்துடன் தமக்குள்ளேயே பார்க்க முடிந்தவர்களுக்கு அவ்வாறெல்லாம் இருக்கின்றான் இறைவன்.

  • வரி 3

    அவ்வாறு பார்க்க முடியாமல் இருக்கின்ற மனிதர்களாகிய மற்றவர்கள் அனைவருக்கும் அவன் மாயனாகவே இருந்து மாயையில் மயக்கி வைத்திருக்கின்றான்.

  • வரி 4

    அதனால் அவர்கள் அனைவரும் தம்முடைய உடலின் மேல் இருக்கின்ற பற்றைக் குறைத்து, உடலுக்குள் இருக்கின்ற ஆன்மாவை அறிந்துகொள்ளுகின்ற முறையை அறியாமல் இருக்கின்றார்கள்.

திருமந்திரம் பாடல் #1540

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout