தொடர்ந்து படிக்கread this section continuously
வழிநடக் கும்பரி சொன்றுண்டு வையங்கழிநடக் குண்டவர் கற்பனை கேட்பர்சுழிநடக் குந்துய ரம்மது நீக்கிப்பழிநடப் பார்க்குப் பரவலு மாமே.
உரைmeaning
இறைவனை அடைகின்ற வழியில் நடக்கும்போது கிடைக்கின்ற பலன் ஒன்று இருக்கின்றது. இந்த உலகத்தில் தனது உடலுக்கு உண்டான வினையின் போக்கில் செல்பவர்கள், மற்றவர்கள் மாயையால் தமக்கு உண்மை என்று நம்பிக் கூறுகின்ற கற்பனையான விஷயங்களை நம்பிக் கேட்கிறார்கள். இவர்கள் தங்களின் வினைகளின் வழியாகவே மற்றவர்கள் சொல்லுவதை உண்மை என்று நம்பிச் செல்லுவதால், பல விதமான துன்பங்களை அனுபவிக்கின்றனர். இதற்குக் காரணமாக இருக்கின்ற வினைகளை நீக்குவதற்கு, உலகத்தில் உள்ளவர்கள் தம் மீது எவ்வளவு பழியைச் சுமத்தினாலும் அதனால் கவலைப்படாமல், இறைவனை அடைகின்ற வழியை விட்டுவிடாமல் நடப்பவர்களுக்கு, இறைவனை அடைவதற்கான அனைத்து விதமான வழிகளும், அந்த வழிகளில் செல்வதற்கான பக்குவங்களும் கிடைக்கும்.
There is a fruit one gains when walking along the way by which God is reached. In this world, those who go along the course of the deeds their own body has earned believe and listen to the imagined things that others, out of illusion, tell them believing them true. Because they go along by their own deeds, believing what others say to be true, they undergo many kinds of sorrow. To be rid of the deeds that are the cause of this, whatever blame the people of the world may heap upon them, those who do not grieve at it and who walk without letting go of the way by which God is reached will gain every kind of way for reaching God, and the ripeness needed to walk along those ways.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவனை அடைகின்ற வழியில் நடக்கும்போது கிடைக்கின்ற பலன் ஒன்று இருக்கின்றது.
There is a fruit one gains when walking along the way by which God is reached.
- வரி 2Line 2
இந்த உலகத்தில் தனது உடலுக்கு உண்டான வினையின் போக்கில் செல்பவர்கள், மற்றவர்கள் மாயையால் தமக்கு உண்மை என்று நம்பிக் கூறுகின்ற கற்பனையான விஷயங்களை நம்பிக் கேட்கிறார்கள்.
In this world, those who go along the course of the deeds their own body has earned believe and listen to the imagined things that others, out of illusion, tell them believing them true.
- வரி 3Line 3
இவர்கள் தங்களின் வினைகளின் வழியாகவே மற்றவர்கள் சொல்லுவதை உண்மை என்று நம்பிச் செல்லுவதால், பல விதமான துன்பங்களை அனுபவிக்கின்றனர்.
Because they go along by their own deeds, believing what others say to be true, they undergo many kinds of sorrow.
- வரி 4Line 4
இதற்குக் காரணமாக இருக்கின்ற வினைகளை நீக்குவதற்கு, உலகத்தில் உள்ளவர்கள் தம் மீது எவ்வளவு பழியைச் சுமத்தினாலும் அதனால் கவலைப்படாமல், இறைவனை அடைகின்ற வழியை விட்டுவிடாமல் நடப்பவர்களுக்கு, இறைவனை அடைவதற்கான அனைத்து விதமான வழிகளும், அந்த வழிகளில் செல்வதற்கான பக்குவங்களும் கிடைக்கும்.
To be rid of the deeds that are the cause of this, whatever blame the people of the world may heap upon them, those who do not grieve at it and who walk without letting go of the way by which God is reached will gain every kind of way for reaching God, and the ripeness needed to walk along those ways.
திருமந்திரம் பாடல் #1548





