திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1549

ஐந்தாம் தந்திரம்21. புறச் சமய நிந்தனை

தொடர்ந்து படிக்கread this section continuously

வழிசென்று மாதவம் வைகின்ற போதுபழிசெல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கேவழிசெல்லும் வல்வினை யார்திறம் விட்டிட்டுழிசெல்லி லும்பர் தலைவன்முன் னாமே.

உரை

இறைவனை அடைகின்ற வழியில் ஆசைகள் இல்லாமல் சென்று புரிகின்ற மாபெரும் தவமானது, அதன் பயனால் நிலைபெற்று நிற்கின்றபோது, ஞானிகள் பழிக்கின்ற உலக வழிகளில் செல்லும்போது வலிமையான வினைகளினால் கட்டியிருக்கின்ற பற்றை அறுத்துவிட்டு, தாம் இருக்கின்ற இடத்திலேயே இறைவனை நோக்கிய வழியில் செல்லுகின்றவர்கள், வலிமையான வினைகளில் ஆட்பட்டு வினை வழியே செல்லுகின்ற உலகத்தவர்களின் உறுதியான பந்த பாசங்களை விட்டுவிட்டு, இறைவன் இருக்கின்ற இடம் நோக்கி அவனை அடைகின்ற வழியில் சென்றால், தேவர்களுக்கு எல்லாம் தலைவனாகிய இறைவனின் முன்பு சென்று நிற்பார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனை அடைகின்ற வழியில் ஆசைகள் இல்லாமல் சென்று புரிகின்ற மாபெரும் தவமானது, அதன் பயனால் நிலைபெற்று நிற்கின்றபோது,

  • வரி 2

    ஞானிகள் பழிக்கின்ற உலக வழிகளில் செல்லும்போது வலிமையான வினைகளினால் கட்டியிருக்கின்ற பற்றை அறுத்துவிட்டு, தாம் இருக்கின்ற இடத்திலேயே இறைவனை நோக்கிய வழியில் செல்லுகின்றவர்கள்,

  • வரி 3

    வலிமையான வினைகளில் ஆட்பட்டு வினை வழியே செல்லுகின்ற உலகத்தவர்களின் உறுதியான பந்த பாசங்களை விட்டுவிட்டு,

  • வரி 4

    இறைவன் இருக்கின்ற இடம் நோக்கி அவனை அடைகின்ற வழியில் சென்றால், தேவர்களுக்கு எல்லாம் தலைவனாகிய இறைவனின் முன்பு சென்று நிற்பார்கள்.

திருமந்திரம் பாடல் #1549

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout