தொடர்ந்து படிக்கread this section continuously
இமையங்க ளாய்நின்ற தேவர்க ளாறுசமையங்கள் பெற்றனர் சாத்திர மோதவமையறிந் தோமென்ப ராதிப் பிரானைக்கமையறிந் தாருட் கலந்துநின் றானே.
உரைmeaning
இமயத்தைப் போல உயர்ந்த நிலையில் நிற்கின்ற தேவர்கள், இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழிமுறைகளை இறைவனிடமிருந்து பெற்றனர். அவர்கள் பெற்ற வழிமுறைகளின்படி சாஸ்திரங்களை ஓதுவதின் மூலமே இறைவனை அடைவதற்கான வழியை அறிந்துகொண்டோம் என்று அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால், அனைத்திற்கும் ஆதியாகவும் தலைவனாகவும் இருக்கின்ற இறைவனை, எந்த விதமான எண்ணங்களும் இல்லாத பேரமைதியில் இருந்து அறிந்துகொண்டவர்களின் உள்ளுக்குள் ஒன்றாகக் கலந்து நிற்கின்றான் இறைவன்.
The celestials who stand in a state as high as the Himalaya received from God the six kinds of way for reaching God. They say that it is only by reciting the sastras according to the ways they received that they have come to know the way for reaching God. But God stands mingled as one within those who have come to know him, the primal one and the lord of all, from a great stillness in which there is no thought of any kind.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இமயத்தைப் போல உயர்ந்த நிலையில் நிற்கின்ற தேவர்கள், இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழிமுறைகளை
The celestials who stand in a state as high as the Himalaya received the six kinds of way for reaching God
- வரி 2Line 2
இறைவனிடமிருந்து பெற்றனர்; அவர்கள் பெற்ற வழிமுறைகளின்படி சாஸ்திரங்களை ஓதுவதின் மூலமே
from God himself; and it is only by reciting the sastras according to the ways they received
- வரி 3Line 3
இறைவனை அடைவதற்கான வழியை அறிந்துகொண்டோம் என்று அவர்கள் கூறுகின்றார்கள்.
that they have come to know the way for reaching God, so they say.
- வரி 4Line 4
ஆனால், அனைத்திற்கும் ஆதியாகவும் தலைவனாகவும் இருக்கின்ற இறைவனை, எந்த விதமான எண்ணங்களும் இல்லாத பேரமைதியில் இருந்து அறிந்துகொண்டவர்களின் உள்ளுக்குள் ஒன்றாகக் கலந்து நிற்கின்றான் இறைவன்.
But God stands mingled as one within those who have come to know him, the primal one and the lord of all, from a great stillness in which there is no thought of any kind.
திருமந்திரம் பாடல் #1550





