திருமூலர் அருளிய திருமந்திரம்
22. நிராதாரம்

ஐந்தாம் தந்திரம் பாடல் 1550–1556 (7 பாடல்கள்)

இமையங்க ளாய்நின்ற தேவர்க ளாறுசமையங்கள் பெற்றனர் சாத்திர மோதவமையறிந் தோமென்ப ராதிப் பிரானைக்கமையறிந் தாருட் கலந்துநின் றானே.

பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடிதாங்கு மனிதர் தரணியி னேரொப்பர்நீங்கிய வண்ண நினைவு செய்யாதவரேங்கி யுலகி லிருந்தழு வாரே.

இருந்தழு வாரு மியல்பு கெட்டாருமருந்தவ மேல்கொண்டங் கண்ணலை யெண்ணில்வருந்தா வகைசெய்து வானவர் கோனும்பெருந்தன்மை நல்கும் பிறப்பிலி தானே.

தூரறி வாளர் துணைவர் நினைப்பிலாப்பாரறி வாளர் படுபயன் றானுண்பர்காரறி வாளர் கலந்து பிறப்பர்கள்நீரறி வார்நெடு மாமுகி லாமே.

அறிவுடன் கூடிய ழைத்ததோர் தோணிபறியுடன் பாரம் பழம்பதி சிந்துங்குறியது கண்டுங் கொடுவினை யாளர்செறிய நினைக்கிலர் சேவடி தானே.

மன்னு மொருவன் மருவு மனோமயனென்னில் மனித ரிகழ்வரி வேழைகள்துன்னி மனமே தொழுமின் றுணையிலிதன்னையு மங்கே தலைப்பட லாமே.

ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே யுதையமுற்றாங்கார மற்று மமைவது கைகூடார்சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்நீங்காச் சமையத்து நின்றொழிந் தார்களே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #1550

1 / 7

0:000:00
22. நிராதாரம்பாடல் 1550

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com