இமையவர் தம்மையு மெம்மையு முன்னம்அமைய வகுத்தவ னாதி புராணன்சமையங்க ளாறுந்தன் றாளிணை நாடவமையங் கழல்நின்ற வாதிப் பிரானே.
பாடல் 1557 — உரைVerse 1557 — meaning
விண்ணுலகத் தேவர்கள் அனைவரையும், மண்ணுலக மனிதர்கள் அனைவரையும், ஆதி காலத்திலேயே அவரவர் வினைகளுக்கு ஏற்ப வகுத்துப் படைத்தவன், ஆதியாகவும் பழமையானவனாகவும் இருக்கின்ற இறைவன். அவனை அடைவதற்கான ஆறு விதமான வழிமுறைகளையும், தனது திருவடிக்கு இணையான முக்தியைத் தமக்குள்ளேயே தேடி அடைவதற்காக, அவரவர் தகுதிகளுக்கு ஏற்றபடி அமைத்துக் கொடுத்தான். அதை முறையாகக் கடைபிடிப்பவர்கள் பக்குவ நிலையை அடையும்போது, ஆதியிலிருந்தே அனைத்திற்கும் தலைவனாக இருக்கின்ற இறைவன் அவர்களுக்குள் நெருப்பு வடிவமாக வந்து நிற்கின்றான்.
It is God, who is the primal one and the ancient one, who from the very first age apportioned and created all the celestials of the heavenly world and all the human beings of the earthly world, each according to their own deeds. He set out all six of the ways of reaching him, fitting them to the capacities of each, so that they might seek within themselves and gain the liberation that is equal to his own sacred feet. And when those who follow such a way in due order come to ripeness, God, who from the beginning is master of all, comes and stands within them in the form of fire.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
விண்ணுலகத் தேவர்கள் அனைவரையும், மண்ணுலக மனிதர்கள் அனைவரையும், ஆதி காலத்திலேயே,
All the celestials of the heavenly world and all the human beings of the earthly world, from the very first age,
- வரி 2Line 2
அவரவர் வினைகளுக்கு ஏற்ப வகுத்துப் படைத்தவன், ஆதியாகவும் பழமையானவனாகவும் இருக்கின்ற இறைவன்.
were apportioned and created, each according to their own deeds, by God, who is the primal one and the ancient one.
- வரி 3Line 3
அவனை அடைவதற்கான ஆறு விதமான வழிமுறைகளையும், தனது திருவடிக்கு இணையான முக்தியைத் தமக்குள்ளேயே தேடி அடைவதற்காக, அவரவர் தகுதிகளுக்கு ஏற்றபடி அமைத்துக் கொடுத்தான்.
He set out all six of the ways of reaching him, fitting them to the capacities of each, so that they might seek within themselves the liberation that is equal to his own sacred feet.
- வரி 4Line 4
அவற்றை முறையாகக் கடைபிடிப்பவர்கள் பக்குவ நிலையை அடையும்போது, ஆதியிலிருந்தே அனைத்திற்கும் தலைவனாக இருக்கின்ற இறைவன் அவர்களுக்குள் நெருப்பு வடிவமாக வந்து நிற்கின்றான்.
And when those who follow such a way in due order come to ripeness, God, who from the beginning is master of all, comes and stands within them in the form of fire.




