திருமூலர் அருளிய திருமந்திரம்
1. சிவகுரு தரிசனம்

ஆறாம் தந்திரம் பாடல் 1573–1589 (17 பாடல்கள்)

பத்திப் பணிந்து பரவும்படி நல்கிச்சுத்த வுரையாற் றுரிசறச் சோதித்துச்சத்து மசத்துஞ் சதசத்துங் காட்டலாற்சித்த மிறையே சிவகுரு வாமே.

பாசத்தைக் கூட்டியே கட்டிப் பறித்திட்டுநேசத்த காயம் விடுவித்து நேர்நேரேகூசற்ற முத்தியிற் கூட்டலா னாட்டகத்தாசற்ற சற்குரு வப்பர மாமே.

சித்திக ளெட்டோடுந் திண்சிவ மாக்கியசுத்தியு மெண்முத்தி தூய்மையும் யோகத்துச்சத்தியு மந்திரஞ் சாதகம் போதமும்பத்தியு நாத னருளிற் பயிலுமே.

எல்லா வுலகிற்கு மப்பாலோ னிப்பாலாய்நல்லா ருளத்து மிக்கரு ணல்கலாலெல்லாரு முய்யக் கொண்டிங்கே யளித்தலாற்சொல்லார்ந்த நற்குருச் சுத்த சிவமே.

தேவனுஞ் சித்த குருவு முபாயத்துள்யாவையின் மூன்றா யினகண் டுரையவேமூவா பசுபாச மாற்றிய முத்திப்பாலாவையு நல்குங் குருபரனன் புற்றே.

சுத்த சிவன்குரு வாய்வந்த துய்மைசெய்தத்தனை நல்லருள் காணா வதிமூடர்பொய்யத்தகு கண்ணா னமரென்பர் புண்ணியரத்த னிவனென் றடிபணி வாரே.

உண்மையிற் பொய்மை ஒழித்தலும் உண்மைப்பார்திண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்வரன்வண்மையும் எட்டெட்டுச் சித்தி மயக்கமும்அண்ணல் அருளன்றி யாரறி வாரே.

சிவனே சிவஞானி யாதலாற் சுத்தசிவனே யெனவடி சேரவல் லார்க்குநவமான தத்துவ நன்முத்தி நண்ணும்பவமான தின்றிப் பரலோக மாமே.

குருவே சிவமென்னக் கூறின னந்திகுருவே சிவமென்பது குறித் தோரார்குருவே சிவமாகக் கோனுமாய் நிற்குங்குருவே யுரையுணர் வற்றதோர் கோவே.

சித்த மியாவையுஞ் சிந்தித் திருந்தாருமத்த னுணர்த்து வதாகு மருளாலேசித்த மியாவையுந் திண்சிவ மாண்டக்காலத்தனு மவ்விடத் தேயமர்ந் தானே.

தானந்தி நீர்மையுட் சந்தித்த சீர்வைத்தகோனந்தி யெந்தை குறிப்பறி வாரில்லைவானந்தி யென்றும் கீழுமொரு வர்க்குத்தானந்தி யங்கித் தனிச்சுட ராமே.

திருவாகிச் சித்தியு முத்தியுஞ் சீர்மையருளா தருளு மயக்கறு வாய்மைபொருளாய வேதாந்த போதமு நாதனுருவருளா விடிலோர வொண் ணாதே.

பத்தியு ஞான வயிராக்க மும்பரசித்திக்கு வித்தாஞ் சிவோகமே சேர்தலான்முத்தியில் ஞான முளைத்தலா லம்முளைசத்தி யருடரிற றானெளி தாமே.

பின்னெய்த வைத்ததோ ரின்பப் பிறப்பினைமுன்னெய்த வைத்த முதல்வனே யெம்மிறைதன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படுமன்னெய்த வைத்த மனமது தானே.

சிவமான ஞானந் தெளியவொண் சித்திசிவமான ஞானந் தெளியவு முத்திசிவமான ஞானஞ் சிவபர தேகுஞ்சிவமான ஞானஞ் சிவானந்த நல்குமே.

அறிந்துணர்ந் தேனிவ் வகலிட முற்றுஞ்செறிந்துணர்ந் தோதித் திருவருள் பெற்றேன்மறந்தொழிந் தேன்மதி மானிடர் வாழ்க்கைபிறந்தொழிந் தேனிப் பிறவியை நானே.

தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவனிருக்கின்ற தன்மையை யேது முணரார்பிரிக்கின்ற விந்தப் பிணக்கறுத் தெல்லாங்கரிக்கொன்ற வீசனைக் கண்டுகொண் டேனே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #1573

1 / 17

0:000:00
1. சிவகுரு தரிசனம்பாடல் 1573

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com