இசைந் தெழுமன்பி லெழுந்த படியில்பசைந் திடுமீசனார் பாசத்து ளேகச்சிவந்த குருவந்து சென்னிகை வைக்கவுவந்த குருபத முள்ளத்து வந்தே.
தாடந்த போதே தனைத்தந்த தெம்மிறைவாடந்து ஞான வலியையுந் தந்திட்டுவீடந்த மன்றியே யாள்கென விட்டருள்ப்பாவின் முடிவைத்துப் பார்வேந்துந் தந்ததே.
தானவ னாதிச் சொரூபத் துள்வந்திட்டுவானச் சொரூபங் கணான்கு மகன்றறவேனைய முத்திரை யீறாண்ட னனந்திதானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே.
உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத்திரையற்ற நீர்போற் சிவமாதல் தீர்வுகரையற்ற சத்தாதி நான்குங் கடந்தசொரூபத் திருத்திநற் சொல்லிறந் தோமே.
குரவனு யிர்முச் சொரூபமுங் கைக்கொண்டரிய பொருள்முத் திரையாகக் கொண்டுபெரிய பிரானடி நந்தி பேச்சற்றுவுருகிட வென்னையங் குய்யக்கொண் டானே.
பேச்சற்ற வின்பத்துப் பேரானந் தத்திலேமாச்சற்ற யென்னைச் சிவமாக்கு மாள்வித்துக்காச்சற்ற சோதி கடன்மூன்றுங் கைக்கொண்டுவாச்சப் புகழ்மாளத் தாடந்து மன்னுமே.
இதையத்து நாட்டத்து மென்றன் சிரத்தும்பதியித்த வந்தப் பராபர னந்திகதிவைத்த வாறு மெய்காட்டிய வாறும்விதிவைத்த வாறும் விளம்பவொண் ணாதே.
திருவடி வைத்தென் சிரத்தரு ணோக்கிப்பெருவடி வைத்தந்தப் பேர்நந்தி தன்னைக்குருவடி விற்கண்ட கோனையெங் கோவைக்கருவடி மாற்றிடக் கண்டுகொண் டேனே.
திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்திருவடி ஞானஞ் சிறைமல நீக்குந்திருவடி ஞானந் திண்சித்தி முத்தியே.
மேல்வைத்த வாறுசெயா விடில்மேல் வினைமால்வைத்த சிந்தையை மாயம தாக்கிடும்பால்வைத்த சென்னிப் படரொளி யானவன்றாள்வைத்த வாறு தரிப்பித்த வாறே.
கழலார் கமலத் திருவடி யென்னுநிழல்சேரப் பெற்றே னெடுமா லறியாவழல்சேரு மங்கியு ளாதிப் பிரானுங்குழல்சேரு மென்னுயிர் கூடுங் குலைத்தே.
முடிமன்ன ராய்மூ வுலகம தாள்வரடிமன்ன ரின்பத் தளவில்லைக் கேட்கின்முடிமன்ன ராய்நின்ற தேவர்க ளீசன்குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே.
வைத்தே னடிகண் மனத்தினுள் ளேநான்பொய்த்தே யெரியும் புலன்வழி போகாமலெய்த்தே னுழலு மிருவினை மாற்றிடுமெய்த்தே னறிந்தே னவ்வேதத்தி னந்தமே.
அடிசார லாமண்ணல் பாத மிரண்டுமுடிசார வைத்தனர் முன்னே முனிவர்படிசார்ந்த வின்பப் பழவடி வெள்ளங்குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே.
மந்திர மாவது மாமருந் தாவதுந்தந்திர மாவதுந் தானங்க ளாவதுஞ்சுந்தர மாவதுந் தூய்நெறி யாவதுமெந்தை பிரான்ற னிணையடி தானே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #1590
1 / 15




