திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1603

ஆறாம் தந்திரம்2. திருவடிப் பேறு

தொடர்ந்து படிக்கread this section continuously

அடிசார லாமண்ணல் பாத மிரண்டுமுடிசார வைத்தனர் முன்னே முனிவர்படிசார்ந்த வின்பப் பழவடி வெள்ளங்குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே.

உரை

ஆதிகாலத்தில் முற்றும் துறந்த முனிவர்கள், இறைவனுடைய பாதங்கள் இரண்டையும் தமது தலையின் மேல் சேர்ந்திருக்கும்படி வைத்து, அத்திருவடிகளையே சார்ந்து இருக்கின்றார்கள். பழம் பெரும் இறைவனுடைய அந்தத் திருவடிகளிலிருந்து வெள்ளம் போல் அவர்கள் பெற்ற பேரின்ப அருளை, உலக உயிர்களின் பக்குவத்திற்கு ஏற்றபடி படிப்படியாக அவை அனுபவிக்கும் வண்ணம் அவர்கள் கொடுக்கின்றார்கள். இறைவனுடைய திருவடிகளைத் தங்களுடைய தலையில் குடி வைத்து, அதையே சார்ந்திருக்கின்ற வழிமுறையில் ஒன்றாகக் கூடி நிற்கின்ற முனிவர்கள் அனைவருடைய கொள்கையும் இதுவே ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனுடைய திருவடிகளையே சார்ந்திருக்கின்றவர்கள், அவனுடைய பாதங்கள் இரண்டையும்,

  • வரி 2

    தமது தலையின் மேல் சேர்ந்திருக்கும்படி வைத்திருக்கின்றார்கள்; ஆதிகாலத்தில் முற்றும் துறந்த முனிவர்கள் இவ்வாறே இருந்தார்கள்.

  • வரி 3

    பழம் பெரும் இறைவனுடைய திருவடிகளிலிருந்து வெள்ளம் போல் அவர்கள் பெற்ற பேரின்ப அருளை, உலக உயிர்களின் பக்குவத்திற்கு ஏற்றபடி படிப்படியாக அனுபவிக்கும் வண்ணம் அவர்கள் கொடுக்கின்றார்கள்.

  • வரி 4

    இறைவனுடைய திருவடிகளைத் தங்களுடைய தலையில் குடி வைத்து, அதையே சார்ந்திருக்கின்ற வழிமுறையில் ஒன்றாகக் கூடி நிற்கின்ற முனிவர்கள் அனைவருடைய கொள்கையும் இதுவே ஆகும்.

திருமந்திரம் பாடல் #1603

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout