தொடர்ந்து படிக்கread this section continuously
மந்திர மாவது மாமருந் தாவதுந்தந்திர மாவதுந் தானங்க ளாவதுஞ்சுந்தர மாவதுந் தூய்நெறி யாவதுமெந்தை பிரான்ற னிணையடி தானே.
உரைmeaning
அனைத்து விதமான மந்திரங்களாக இருப்பதும், மாபெரும் மருந்தாக இருப்பதும், இறைவனை அடைவதற்கான வித்தைகளாகிய தந்திரமாக இருப்பதும், உலகத்தில் உள்ள அனைத்து விதமான தான தர்மங்களாக இருப்பதும், அழுக்கை நீக்கிய பேரழகாக இருப்பதும், இறைவனை அடைவதற்கான தூய்மையான வழிமுறையாக இருப்பதும், எமது தந்தையும் அனைத்திற்கும் தலைவனும் ஆகிய இறைவனுடைய, ஒன்றாகச் சேர்ந்தே இருக்கின்ற திருவடிகளே ஆகும்.
That which is every kind of mantra, that which is the great medicine, that which is the tantra, the arts by which God is reached, that which is every kind of gift and charity in the world, that which is the great beauty from which all stain has been taken away, and that which is the pure way of reaching God: all of these are the sacred feet of the Lord who is our father and the lord of all, the two feet that stand always joined as one.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அனைத்து விதமான மந்திரங்களாக இருப்பதும், மாபெரும் மருந்தாக இருப்பதும்,
That which is every kind of mantra, and that which is the great medicine,
- வரி 2Line 2
இறைவனை அடைவதற்கான வித்தைகளாகிய தந்திரமாக இருப்பதும், உலகத்தில் உள்ள அனைத்து விதமான தான தர்மங்களாக இருப்பதும்,
that which is the tantra, the arts by which God is reached, and that which is every kind of gift and charity in the world,
- வரி 3Line 3
அழுக்கை நீக்கிய பேரழகாக இருப்பதும், இறைவனை அடைவதற்கான தூய்மையான வழிமுறையாக இருப்பதும்,
that which is the great beauty from which all stain has been taken away, and that which is the pure way of reaching God,
- வரி 4Line 4
எமது தந்தையும் அனைத்திற்கும் தலைவனும் ஆகிய இறைவனுடைய, ஒன்றாகச் சேர்ந்தே இருக்கின்ற திருவடிகளே ஆகும்.
are the sacred feet of the Lord who is our father and the lord of all, the two feet that stand always joined as one.
திருமந்திரம் பாடல் #1604
1 / 2





