திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1602

ஆறாம் தந்திரம்2. திருவடிப் பேறு

தொடர்ந்து படிக்கread this section continuously

வைத்தே னடிகண் மனத்தினுள் ளேநான்பொய்த்தே யெரியும் புலன்வழி போகாமலெய்த்தே னுழலு மிருவினை மாற்றிடுமெய்த்தே னறிந்தே னவ்வேதத்தி னந்தமே.

உரை

இறைவனுடைய திருவடிகளை எனது கண்களிலும் மனத்திற்கு உள்ளேயும் யான் வைத்துக்கொண்டேன். அதனால், உண்மையை மறைத்துப் பொய்யான ஆசைகளையே அதிகமாக்குகின்ற ஐந்து புலன்களின் வழியே மனம் போய்விடாமல், ஆசைகள் அற்ற மேல் நிலைக்கு அத்திருவடிகள் என்னை எடுத்துச் செல்லும். பிறவிச் சுழலில் சுழன்றுகொண்டே இருப்பதற்குக் காரணமாகிய நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான வினைகளையும் அவை மாற்றிவிடும். அவ்வாறு, உண்மையான பேரின்பத்தைக் கொடுக்கின்ற தேனாகவும், வேதங்களின் எல்லையாக இருக்கின்ற பரம்பொருளாகவும் உள்ள இறைவனை யான் அறிந்துகொண்டேன்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனுடைய திருவடிகளை எனது கண்களிலும் மனத்திற்கு உள்ளேயும் யான் வைத்துக்கொண்டேன்.

  • வரி 2

    உண்மையை மறைத்துப் பொய்யான ஆசைகளையே அதிகமாக்குகின்ற ஐந்து புலன்களின் வழியே மனம் போய்விடாமல் அத்திருவடிகள் காக்கும்.

  • வரி 3

    ஆசைகள் அற்ற மேல் நிலைக்கு என்னை எடுத்துச் சென்று, பிறவிச் சுழலில் சுழன்றுகொண்டே இருப்பதற்குக் காரணமாகிய நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான வினைகளையும் அவை மாற்றிவிடும்.

  • வரி 4

    உண்மையான பேரின்பத்தைக் கொடுக்கின்ற தேனாகவும், வேதங்களின் எல்லையாக இருக்கின்ற பரம்பொருளாகவும் உள்ள இறைவனை யான் அறிந்துகொண்டேன்.

திருமந்திரம் பாடல் #1602

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout