நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்பாங்கான பாசம் படரா படரினும்ஆங்கார நீங்கி யதநிலை நிற்கவேநீங்கா அமுத நிலைபெற லாமே.
பாடல் 1605 — உரைVerse 1605 — meaning
திருவடிப் பேற்றைப் பெற்ற அடியவர்கள், சிவப் பரம்பொருளின் பேரானந்தத்திலிருந்து நீங்காமல், தூய்மையான அன்பிலே நின்று இருப்பார்கள். அப்படி நிற்கின்ற பாவனையை விட்டுவிடாமல் இருக்கும்போது பாசத் தளைகள் அவர்களை மூடிவிடாமல் இருக்கும். பிறகு உலக நன்மைக்காகச் செயல்கள் செய்யும்போது பாசம் வந்தால்கூட, நான் என்கின்ற அகங்காரம் நீங்கிவிட்டதனால், பாசத் தளைகளால் மறுபடியும் மாயையில் மூழ்கிவிடாத நிலையிலேயே அவர்கள் நிலைத்து நிற்பார்கள். அப்போது, எப்போதும் நீங்காத சமாதி நிலையில் அமிழ்தத்தைப் பருகிக்கொண்டே பேரின்பத்தில் திளைத்து நிற்கின்ற நிலையை அவர்களால் பெற முடியும்.
The devotees who have received the gift of the sacred feet stand in the supreme joy of Siva, never departing from it, and stand there in pure love. While they do not let go of that stance, the bonds of attachment do not close over them. Afterwards, when they act for the good of the world, even if attachment comes to them, the ego that says I has gone, and so they stand firm in the state in which the bonds cannot sink them into illusion again. Then they are able to gain the state in which, in a samadhi that never leaves them, they drink the nectar and abide steeped in supreme bliss.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
திருவடிப் பேற்றைப் பெற்ற அடியவர்கள், சிவப் பரம்பொருளின் பேரானந்தத்திலிருந்து நீங்காமல், தூய்மையான அன்பிலே நின்று இருப்பார்கள்.
The devotees who have received the gift of the sacred feet stand in the supreme joy of Siva, never departing from it, and stand there in pure love.
- வரி 2Line 2
அப்படி நிற்கின்ற பாவனையை விட்டுவிடாமல் இருக்கும்போது பாசத் தளைகள் அவர்களை மூடிவிடாமல் இருக்கும்; பிறகு உலக நன்மைக்காகச் செயல்கள் செய்யும்போது பாசம் வந்தால்கூட,
While they do not let go of that stance, the bonds of attachment do not close over them; and afterwards, when they act for the good of the world, even if attachment comes to them,
- வரி 3Line 3
நான் என்கின்ற அகங்காரம் நீங்கிவிட்டதனால், பாசத் தளைகளால் மறுபடியும் மாயையில் மூழ்கிவிடாத நிலையிலேயே அவர்கள் நிலைத்து நிற்பார்கள்.
the ego that says I has gone from them, and so they stand firm in the state in which the bonds cannot sink them into illusion again.
- வரி 4Line 4
அப்போது, எப்போதும் நீங்காத சமாதி நிலையில் அமிழ்தத்தைப் பருகிக்கொண்டே பேரின்பத்தில் திளைத்து நிற்கின்ற நிலையை அவர்களால் பெற முடியும்.
Then they are able to gain the state in which, in a samadhi that never leaves them, they drink the nectar and abide steeped in supreme bliss.




