தொடர்ந்து படிக்கread this section continuously
மேலைச் சொரூபங்கள் மூன்று மிகுசத்திபாலித்த முத்திரைப் பற்றுப் பரஞானமாலித்த நாட்டமே ஞேயம் பகுத்தற்றமூலச் சொரூபன் மொழிஞா துருவனே.
உரைmeaning
அனைத்திற்கும் மேலே இருக்கின்ற இறைவனுடைய சொரூபங்களாக இருக்கின்ற, பார்க்கின்றவன், பார்க்கின்ற ஞானம், பார்க்கப்படுகின்ற பொருள் ஆகிய மூன்று விதமான தத்துவங்களுக்கும் மேலான சக்தியாகிய இறைவன், தம்முடைய திருவருளால், இந்த மூன்று திரைகளையும் தெரிந்துகொள்ளும் பரம்பொருளின் பேரறிவாகிய ஞானத்தை அருளுவான்; அதனைச் சாதகர் பெறுவார். அந்த ஞானத்தின் மூலம், தமக்குள் ஆனந்த வடிவாக இருக்கின்ற சிவப் பரம்பொருளைப் பார்த்து உணர்ந்து, இது ஞானத்தால் பார்க்கப்படுகின்ற பொருள், இது பார்க்கின்றவன் என்று தனித்தனியாகப் பிரிந்திருக்கின்ற நிலை இல்லாமல் போய், அனைத்திற்கும் மூலமாகிய இறைவனுடைய சொரூபமாக இருக்கின்ற அந்தப் பொருள் பார்க்கின்றவனாக இருக்கின்ற தாமே என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளுவார்கள்.
God is the power that stands above the three principles which are his own forms above all things, the one who sees, the wisdom that sees and the thing that is seen. By his own grace he grants the great knowing of the supreme reality by which those three veils are known, and the seeker receives it. Through that wisdom the seeker sees and realizes the supreme reality Siva that is within him in the form of bliss; the state in which this is held apart as the thing seen by wisdom and that as the one who sees comes to an end; and they realize that the thing which is the very form of the God who is the source of all is themselves, the one who sees.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அனைத்திற்கும் மேலே இருக்கின்ற இறைவனுடைய சொரூபங்களாகிய பார்க்கின்றவன், பார்க்கின்ற ஞானம், பார்க்கப்படுகின்ற பொருள் ஆகிய மூன்று தத்துவங்களுக்கும் மேலான சக்தியாக இறைவன் இருக்கின்றான்.
God is the power standing above the three principles that are his own forms above all things: the one who sees, the wisdom that sees and the thing that is seen.
- வரி 2Line 2
அவன் தம்முடைய திருவருளால், அந்த மூன்று திரைகளையும் தெரிந்துகொள்ளும் பரம்பொருளின் பேரறிவாகிய ஞானத்தைச் சாதகருக்கு அருளுவான்.
By his own grace he grants the seeker the great knowing of the supreme reality by which those three veils are known.
- வரி 3Line 3
அந்த ஞானத்தின் மூலம், தமக்குள் ஆனந்த வடிவாக இருக்கின்ற சிவப் பரம்பொருளைப் பார்த்து உணர்ந்து, பார்க்கப்படுகின்ற பொருள் என்றும் பார்க்கின்றவன் என்றும் தனித்தனியாகப் பிரிந்திருக்கின்ற நிலை இல்லாமல் போகும்.
Through that wisdom the seeker sees and realizes the supreme reality Siva within him in the form of bliss, and the state in which the thing seen and the one who sees are held apart comes to an end.
- வரி 4Line 4
அனைத்திற்கும் மூலமாகிய இறைவனுடைய சொரூபமாக இருக்கின்ற அந்தப் பொருள், பார்க்கின்றவனாக இருக்கின்ற தாமே என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளுவார்கள்.
They realize that the thing which is the very form of the God who is the source of all is themselves, the one who sees.
திருமந்திரம் பாடல் #1613
1 / 2





