தொடர்ந்து படிக்கread this section continuously
இறப்பும் பிறப்பு மிருமையு நீங்கித்துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானைமறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்கறப்பதி காட்டு மமரர் பிரானே.
உரைmeaning
இறைவனுடைய திருவருளால் பெற்ற ஞானத்தின் மூலம் இறைவனை உணர்ந்து, மும்மலங்களையும் அறுத்து, இறப்பு பிறப்பு ஆகிய இரண்டு விதமான தன்மைகளும் நீங்கிவிட, அனைத்தையும் விட்டு விலகி நிற்கின்ற துறவாகிய தவ நிலையில் சாதகர் ஜோதி மயமாகிய இறைவனைக் கண்டார். அந்த இறைவனை எப்போதும் மறந்துவிடாமல், தமது வாயால் சொல்லுவது எல்லாம் இறைவனுடைய சொல்லாகவே சொல்லுபவர்களுக்கு, தர்மம் இருக்கின்ற இடமாகிய சிவலோகத்தைக் காட்டி அருளுவான், அமரர்களின் தலைவனாகிய இறைவன்.
By the wisdom received through God's grace the seeker realized God, cut away the three taints, and both conditions, death and birth, departed. In the state of tapas that is renunciation, standing apart from everything, the seeker saw God who is all light. For those who never forget that God, and who speak with their own mouths nothing but his word, the Lord who is chief of the immortals will show the world of Siva, the place where dharma abides.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவனுடைய திருவருளால் பெற்ற ஞானத்தின் மூலம் இறைவனை உணர்ந்து, மும்மலங்களையும் அறுத்து, இறப்பு பிறப்பு ஆகிய இரண்டு விதமான தன்மைகளும் நீங்கிவிடும்.
By the wisdom received through God's grace one realizes God, cuts away the three taints, and both conditions, death and birth, depart.
- வரி 2Line 2
அனைத்தையும் விட்டு விலகி நிற்கின்ற துறவாகிய தவ நிலையில் சாதகர் ஜோதி மயமாகிய இறைவனைக் காண்கின்றார்.
In the state of tapas that is renunciation, standing apart from everything, the seeker sees God who is all light.
- வரி 3Line 3
அந்த இறைவனை எப்போதும் மறந்துவிடாமல், தமது வாயால் சொல்லுவது எல்லாம் இறைவனுடைய சொல்லாகவே சொல்லுபவர்களுக்கு,
For those who never forget that God, and who speak with their own mouths nothing but his word,
- வரி 4Line 4
தர்மம் இருக்கின்ற இடமாகிய சிவலோகத்தைக் காட்டி அருளுவான், அமரர்களின் தலைவனாகிய இறைவன்.
the Lord who is chief of the immortals will show the world of Siva, the place where dharma abides.
திருமந்திரம் பாடல் #1614
1 / 2





