திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1615

தொடர்ந்து படிக்கread this section continuously

பிறந்து மிறந்தும் பல்பேதைமை யாலேமறந்து மலவிரு ணீங்க மறைந்துசிறந்த சிவனருள் சேர் பருவத்துத்துறந்த வுயிர்க்குச் சுடரொளி யாமே.

உரை

பல முறை பிறவி எடுத்து எடுத்து இறக்கின்ற பிறவிச் சுழலிலிருந்து விடுதலை பெறுகின்ற அறிவு இல்லாததனால், தமக்குள் இறைவன் இருப்பதையே மறந்து, மாயையாகிய மலத்தின் இருளில் இருக்கின்றார்கள். அந்த இருள் அவர்களை விட்டு நீங்கி மறைந்து போகும்படி, சிறப்பான இறைவனுடைய பேரருளை அவர்கள் அடைகின்ற காலத்தில், அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற துறவாகிய தவ நிலையில் இருக்கின்ற உயிர்களுக்கு, இறைவனுடைய அந்தப் பேரருள் பிரகாசமாகத் திகழ்கின்ற சுடர் ஒளியாக விளங்கும்.

வரி வாரியாக

  • வரி 1

    பல முறை பிறவி எடுத்து எடுத்து இறக்கின்ற பிறவிச் சுழலிலிருந்து விடுதலை பெறுகின்ற அறிவு இல்லாதவர்களாக உயிர்கள் இருக்கின்றன.

  • வரி 2

    அதனால் தமக்குள் இறைவன் இருப்பதையே மறந்து மாயையாகிய மலத்தின் இருளில் இருக்கின்றார்கள்; அந்த இருள் அவர்களை விட்டு நீங்கி மறைந்து போக வேண்டும்.

  • வரி 3

    அவ்வாறு அது நீங்கும்படி, சிறப்பான இறைவனுடைய பேரருளை அவர்கள் அடைகின்ற காலத்தில்,

  • வரி 4

    அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற துறவாகிய தவ நிலையில் இருக்கின்ற உயிர்களுக்கு, இறைவனுடைய அந்தப் பேரருள் பிரகாசமாகத் திகழ்கின்ற சுடர் ஒளியாக விளங்கும்.

திருமந்திரம் பாடல் #1615

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout