திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1616

தொடர்ந்து படிக்கread this section continuously

அறவன் பிறப்பிலி யாரு மில்லாதானுறைவது காட்டக முண்பது பிச்சைதுறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப்பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே.

உரை

அனைத்தையும் விட்டு விலகி இருப்பவனும், பிறப்பு என்பதே இல்லாதவனும், தனக்குச் சொந்தமானவர்கள் என்று எவரும் இல்லாதவனும் ஆகியவன் இறைவன். அவன் தமக்குள்ளே வீற்றிருக்கின்ற இடத்தை உணர்வதற்கு, உள்ளுக்குள்ளே இருக்கின்ற பொருளாகிய ஆன்மா தமக்குள் ஆராய்ந்து அறிந்து உணர்ந்துகொள்ளுகின்ற ஞானம் வேண்டும். அந்த ஞானத்தினால், தமக்குள் அனைத்தையும் துறந்து வீற்றிருக்கின்ற மாபெரும் துறவியாகிய இறைவனையும் நீங்கள் பார்த்தீர்கள். அவனைப் போலவே அனைத்தையும் துறந்திருக்கின்ற அடியவர்களுடைய பிறவிகளை அறுத்து நீக்கிவிடும் இறைவனும் அவனே என்பதையும் துறவிகள் காண்பார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    அனைத்தையும் விட்டு விலகி இருப்பவனும், பிறப்பு என்பதே இல்லாதவனும், தனக்குச் சொந்தமானவர்கள் என்று எவரும் இல்லாதவனும் ஆகியவன் இறைவன்.

  • வரி 2

    அந்த இறைவன் தமக்குள்ளே வீற்றிருக்கின்ற இடத்தை உணர்வதற்கு, உள்ளுக்குள்ளே இருக்கின்ற பொருளாகிய ஆன்மா தமக்குள் ஆராய்ந்து அறிந்து உணர்ந்துகொள்ளுகின்ற ஞானம் வேண்டும்.

  • வரி 3

    அந்த ஞானத்தினால், தமக்குள் அனைத்தையும் துறந்து வீற்றிருக்கின்ற மாபெரும் துறவியாகிய இறைவனையும் நீங்கள் பார்த்தீர்கள்.

  • வரி 4

    அவனைப் போலவே அனைத்தையும் துறந்திருக்கின்ற அடியவர்களுடைய பிறவிகளை அறுத்து நீக்கிவிடும் இறைவனும் அவனே என்பதையும் துறவிகள் காண்பார்கள்.

திருமந்திரம் பாடல் #1616

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout