திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1617

தொடர்ந்து படிக்கread this section continuously

நெறியைப் படைத்தா னெருஞ்சில் படைத்தானெறியில் வழுவில் நெருஞ்சில் முட்பாயுநெறியில் வழுவா தியங்கவல் லார்க்குநெறியில் நெருஞ்சில் முட்பாயகில் லாவே.

உரை

அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற துறவறத்தை மேற்கொள்ளுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் படைத்த இறைவனே, அந்த வழிமுறைகளைச் சரியாகக் கடைபிடிக்காதபோது அதை உணர்த்துவதற்குக் கடினமான முள்ளைப் போன்ற துன்பங்களையும் படைத்தான். கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளிலிருந்து சிறிது விலகி நடந்தாலும், அந்தக் கடினமான முள் போன்ற துன்பங்கள் பாய்ந்து, வழி தவறிச் செல்வதைச் சாதகருக்கு நினைவூட்டும். சிறிதளவும்கூடத் தாம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளிலிருந்து விலகிவிடாமல் செயல்பட முடிந்தவர்களுக்கு, அவர்கள் கடைபிடிக்கின்ற வழிமுறைகளில் ஒரு பொழுதும் கடினமான முள்கள் போன்ற துன்பங்கள் பாய்வது இருக்காது.

வரி வாரியாக

  • வரி 1

    துறவறத்தை மேற்கொள்ளுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் படைத்த இறைவனே, அவற்றைச் சரியாகக் கடைபிடிக்காதபோது அதை உணர்த்துவதற்குக் கடினமான முள்ளைப் போன்ற துன்பங்களையும் படைத்தான்.

  • வரி 2

    கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளிலிருந்து சிறிது விலகி நடந்தாலும், அந்த முள் போன்ற துன்பங்கள் பாய்ந்து வழி தவறிச் செல்வதைச் சாதகருக்கு நினைவூட்டும்.

  • வரி 3

    சிறிதளவும்கூடத் தாம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளிலிருந்து விலகிவிடாமல் செயல்பட முடிந்தவர்களுக்கு,

  • வரி 4

    அவர்கள் கடைபிடிக்கின்ற வழிமுறைகளில் ஒரு பொழுதும் கடினமான முள்கள் போன்ற துன்பங்கள் பாய்வது இருக்காது.

திருமந்திரம் பாடல் #1617

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout