தொடர்ந்து படிக்கread this section continuously
முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றின்பால்வைத்த கலைகாலை நான்மடங் கான்மாற்றியுய்த்த தவத்தாந்தத் தொண்குரு பாதத்தேபெத்த மறுத்தோர் பிறந்திற வாரே.
உரைmeaning
மூன்று திரைகளாகிய மாயையால் மூடப்பட்டிருக்கின்ற, பார்க்கின்றவன், பார்க்கின்ற ஞானம், பார்க்கப்படுகின்ற பொருள் ஆகிய மூன்றையும் மூடியிருக்கின்ற அந்த மாயை முடிந்துவிடுவதற்கு ஒரு தவம் உண்டு. அத்தவத்தில், இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளின் வழியே இறைவன் பிறக்கும்போதே இயல்பாக வைத்து அருளிய மூச்சுக்காற்றின் போக்குவரத்து, அதன் இயல்பான கீழ் நிலையிலிருந்து மாறி மேல்நோக்கிச் செல்கின்றது. அத்தவத்தில் முழுமை பெற்ற நிலையில், சாதகரோடு ஒன்றி இருக்கின்ற குருநாதராகிய இறைவனுடைய திருவடிகளைப் பெற்று, பிறவிக்குக் காரணமாகிய மூன்று மலங்களையும் அவற்றைச் சார்ந்த அனைத்துப் பற்றுக்களையும் அறுத்துவிட்டவர்கள், இனிப் பிறக்கவோ இறக்கவோ மாட்டார்கள்.
The three that the illusion of the three veils covers over are the one who sees, the wisdom that sees, and the thing that is seen. For that covering illusion to end there is a tapas, and in it the coming and going of the breath, which God placed by nature in the three channels ida, pingala and sushumna at the very moment of birth, turns from its natural downward course and moves upward. Those who have come to fullness in that tapas receive the sacred feet of the Lord who is the guru and who is one with the seeker, and having cut away the three taints that cause birth and every attachment that belongs to them, they will not be born again nor die again.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
மூன்று திரைகளாகிய மாயையால் மூடப்பட்டிருக்கின்ற, பார்க்கின்றவன், பார்க்கின்ற ஞானம், பார்க்கப்படுகின்ற பொருள் ஆகிய மூன்றையும் மூடியிருக்கின்ற அந்த மாயை முடிந்துவிடுகின்றது.
The illusion of the three veils, which covers over the one who sees, the wisdom that sees and the thing that is seen, comes to its end.
- வரி 2Line 2
இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளின் வழியே இறைவன் பிறக்கும்போதே இயல்பாக வைத்து அருளிய மூச்சுக்காற்றின் போக்குவரத்து, அதன் இயல்பான கீழ் நிலையிலிருந்து மாறி மேல்நோக்கிச் செல்கின்றது.
The coming and going of the breath, which God placed by nature in the three channels ida, pingala and sushumna at the moment of birth, turns from its natural downward course and moves upward.
- வரி 3Line 3
அத்தவத்தில் முழுமை பெற்ற நிலையில், சாதகரோடு ஒன்றி இருக்கின்ற குருநாதராகிய இறைவனுடைய திருவடிகளைப் பெறுகின்றார்கள்.
Having come to fullness in that tapas, they receive the sacred feet of the Lord who is the guru and who is one with the seeker.
- வரி 4Line 4
பிறவிக்குக் காரணமாகிய மூன்று மலங்களையும் அவற்றைச் சார்ந்த அனைத்துப் பற்றுக்களையும் அறுத்துவிட்டவர்கள், இனிப் பிறக்கவோ இறக்கவோ மாட்டார்கள்.
Those who have cut away the three taints that cause birth and every attachment that belongs to them will not be born again nor die again.
திருமந்திரம் பாடல் #1612
1 / 2





