தொடர்ந்து படிக்கread this section continuously
மோனங்கை வந்தோர்க்கு முத்தியுங் கைகூடுமோனங்கை வந்தோர்க்குச் சித்தியு முன்னிற்குமோனங்கை வந்தூமை யாமொழி முற்றுங்காண்மோனங்கை வந்தைங் கருமமு முன்னுமே.
உரைmeaning
பேச்சுகளும் எண்ணங்களும் அற்ற மோன நிலை கைகூடும்படி அடைந்தவர்களுக்கு முக்தி நிலையும் கைகூடும். அனைத்து விதமான சித்திகளும் அவர்களுக்குள் நிலைத்து நிற்கும். உடல் அசைவுகளால் பேசுகின்ற மொழிகூட அவர்களை விட்டு முழுவதும் நீங்கிவிடுவதை அவர்கள் காணலாம். உலகத்தில் இறைவன் செய்கின்ற ஐந்து விதமான தொழில்களையும் தமக்குள்ளேயே அவர்களால் உணர முடியும்.
For those who have attained the silent state in which speech and thought have ceased, the state of liberation also comes into their hands. Every kind of attainment stands firm within them. They may see that even the speech made by the movements of the body leaves them entirely. And they are able to realize within themselves the five kinds of work that God performs in the world.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பேச்சுகளும் எண்ணங்களும் அற்ற மோன நிலை கைகூடும்படி அடைந்தவர்களுக்கு முக்தி நிலையும் கைகூடும்.
For those who have attained the silent state in which speech and thought have ceased, the state of liberation also comes into their hands.
- வரி 2Line 2
அந்த மோன நிலை கைகூடியவர்களுக்கு அனைத்து விதமான சித்திகளும் அவர்களுக்குள் நிலைத்து நிற்கும்.
For those in whose hands that silent state has come, every kind of attainment stands firm within them.
- வரி 3Line 3
மோன நிலை கைகூடியவர்களை விட்டு, உடல் அசைவுகளால் பேசுகின்ற மொழிகூட முழுவதும் நீங்கிவிடுவதை அவர்கள் காணலாம்.
They may see that even the speech made by the movements of the body leaves entirely those in whose hands the silent state has come.
- வரி 4Line 4
மோன நிலை கைகூடியவர்களால், உலகத்தில் இறைவன் செய்கின்ற ஐந்து விதமான தொழில்களையும் தமக்குள்ளேயே உணர முடியும்.
Those in whose hands the silent state has come are able to realize within themselves the five kinds of work that God performs in the world.
திருமந்திரம் பாடல் #1611
1 / 2





