தொடர்ந்து படிக்கread this section continuously
காணாத கண்ணுடன் கேளாத கேள்வியுங்கோணாத போதமுங் கூடாத கூட்டமுநாணாத நாணமு நாதாந்த போதமுங்காணா யெனவந்து காட்டின னந்தியே.
உரைmeaning
இதுவரை இறைவனைக் கண்டு அறியாத ஊனக் கண்ணை மாற்றி, அவனைக் காண வைக்கின்ற ஞானக் கண்ணையும்; இறைவன் என்று ஒருவர் இருப்பதையே அறியாமல் இருக்கின்ற நிலையை மாற்றுகின்ற அறிவையும்; தன்னுடைய நிலையிலிருந்து எப்போதும் மாறாத ஞானத்தையும்; இறைவனோடு தாம் சேர்ந்திருக்கின்றோம் என்பதையே அறியாமல் இருந்த எண்ணத்தை மாற்றி அவனோடு சேர்ந்திருப்பதையும்; இறைவனைப் பற்றிக்கொள்ளாமல் உலகப் பற்றுக்களிலேயே இருந்த மனதை மாற்றி இறைவனைப் பற்றிக்கொள்வதையும்; நாதத்தின் எல்லையாக இருக்கின்ற ஞானத்தையும், இதுவரை அறியாமல் இருக்கின்றாய் என்று கருணையோடு வந்து, என்னைத் தடுத்து ஆட்கொண்டு காட்டி அறிய வைத்தான், குருநாதனாக வந்த இறைவன்.
The eye of flesh that until then had never seen God he changed into the eye of wisdom that makes him seen. The condition of not even knowing that there is one called God he changed into the knowledge that ends it. He gave the wisdom that never moves from its own place. The thought that did not know that we are joined with God he changed into the very being joined with him. The mind that held to the world's attachments and not to God he changed into the holding to God. And he gave the wisdom that stands at the far end of sound. Saying that until then I had known none of these, he came in compassion, stopped me and took me into his keeping, and showed them to me and made me know them, the Lord who came as my guru.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இதுவரை இறைவனைக் கண்டு அறியாத ஊனக் கண்ணை மாற்றி அவனைக் காண வைக்கின்ற ஞானக் கண்ணையும், இறைவன் என்று ஒருவர் இருப்பதையே அறியாமல் இருக்கின்ற நிலையை மாற்றுகின்ற அறிவையும் அவன் அருளினான்.
He changed the eye of flesh that had never seen God into the eye of wisdom that makes him seen, and gave the knowledge that ends the condition of not even knowing that there is one called God.
- வரி 2Line 2
தன்னுடைய நிலையிலிருந்து எப்போதும் மாறாத ஞானத்தையும், இறைவனோடு தாம் சேர்ந்திருக்கின்றோம் என்பதையே அறியாமல் இருந்த எண்ணத்தை மாற்றி அவனோடு சேர்ந்திருப்பதையும் அருளினான்.
He gave the wisdom that never moves from its own place, and changed the thought that did not know that we are joined with God into the very being joined with him.
- வரி 3Line 3
இறைவனைப் பற்றிக்கொள்ளாமல் உலகப் பற்றுக்களிலேயே இருந்த மனதை மாற்றி இறைவனைப் பற்றிக்கொள்வதையும், நாதத்தின் எல்லையாக இருக்கின்ற ஞானத்தையும் அருளினான்.
He changed the mind that held to the world's attachments and not to God into the holding to God, and gave the wisdom that stands at the far end of sound.
- வரி 4Line 4
இவற்றை இதுவரை அறியாமல் இருக்கின்றாய் என்று கருணையோடு வந்து, என்னைத் தடுத்து ஆட்கொண்டு காட்டி அறிய வைத்தான், குருநாதனாக வந்த இறைவன்.
Saying that until then I had known none of these, he came in compassion, stopped me and took me into his keeping, and showed them to me and made me know them, the Lord who came as my guru.
திருமந்திரம் பாடல் #1610
1 / 2





