தொடர்ந்து படிக்கread this section continuously
முன்னை யறிவறி யாதவம் மூடர்போற்பின்னை யறிவறி யாமையைப் பேதித்தான்றன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத்தென்னை யறிவித் திருந்தன னந்தியே.
உரைmeaning
இறைவனே குருவாக வருவதற்கு முன்பு, அவனை அறிகின்ற அறிவை அறியாமல் பந்த பாசங்களில் சிக்கிக்கொண்டு மாயையிலேயே உழன்றுகொண்டு இருக்கின்ற இந்த உலகத்தாரைப் போலவே யானும் இருந்தேன். என்னைத் தடுத்து ஆட்கொள்வதற்காக இறைவனே குருவாக வந்த பிறகு, அவனை அறிந்திருக்கின்ற ஞானத்தையும் அவனை அறியாமல் இருக்கின்ற அறியாமையையும் பிரித்துக் காட்டி அருளினான். அதன் பிறகு, எனக்குள் இருக்கும் இறைவனை அறிந்துகொள்ளும்படி செய்து, அவரைப் போலவே என்னையும் பரம்பொருளாக ஆக்கி, தமது சிவத் தன்மையை யானும் அறிந்துகொள்ளும்படி செய்து என்னுடன் வீற்றிருந்தார், குருநாதராக வந்த இறைவன்.
Before God himself came as my guru, I too was like the people of this world who, not knowing the knowledge by which he is known, are caught in bonds and attachments and turn about in illusion alone. After God himself came as my guru in order to stop me and take me into his keeping, he graciously separated out for me the wisdom that knows him from the ignorance that does not know him. After that he made me know the God who is within me, made me too into the supreme reality just as he is, made me know his own nature as Siva, and remained seated with me, the Lord who came as my guru.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவனே குருவாக வருவதற்கு முன்பு, அவனை அறிகின்ற அறிவை அறியாமல் பந்த பாசங்களில் சிக்கி மாயையிலேயே உழன்றுகொண்டிருக்கின்ற இந்த உலகத்தாரைப் போலவே யானும் இருந்தேன்.
Before God himself came as my guru, I too was like the people of this world who, not knowing the knowledge by which he is known, are caught in bonds and attachments and turn about in illusion alone.
- வரி 2Line 2
என்னைத் தடுத்து ஆட்கொள்வதற்காக இறைவனே குருவாக வந்த பிறகு, அவனை அறிந்திருக்கின்ற ஞானத்தையும் அவனை அறியாமல் இருக்கின்ற அறியாமையையும் பிரித்துக் காட்டி அருளினான்.
After God himself came as my guru in order to stop me and take me into his keeping, he graciously separated out for me the wisdom that knows him from the ignorance that does not.
- வரி 3Line 3
அதன் பிறகு, எனக்குள் இருக்கும் இறைவனை அறிந்துகொள்ளும்படி செய்து, அவரைப் போலவே என்னையும் பரம்பொருளாக ஆக்கினான்.
After that he made me know the God who is within me, and made me too into the supreme reality just as he is.
- வரி 4Line 4
தமது சிவத் தன்மையை யானும் அறிந்துகொள்ளும்படி செய்து என்னுடன் வீற்றிருந்தார், குருநாதராக வந்த இறைவன்.
He made me know his own nature as Siva and remained seated with me, the Lord who came as my guru.
திருமந்திரம் பாடல் #1609
1 / 2





