திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1608

ஆறாம் தந்திரம்3. ஞாதுரு ஞான ஞேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

வைச்சன வாறாறு மகற்றியே வைத்துமெச்ச பரமன்றன் வியாத்தும் மேலிட்டுநிச்சய மாகச் சிவமாக்கி நேயத்தாலச்சங் கெடுத்தென்னை யாண்டன னந்தியே.

உரை

பிறவி எடுக்கும்போது உடலில் இறைவன் வைத்து அருளிய முப்பத்தாறு தத்துவங்களையும் உடலிலிருந்து நீக்கி வைத்து, அனைத்திற்கும் மேலான பொருள் என்று வியக்கத் தகுந்த பரம்பொருளாகிய இறைவன், தன்னைப் போலவே அனைத்திலும் வியாபித்து இருக்கின்ற மேலான நிலைக்கு என்னைக் கொண்டு வந்தான். உறுதியாக என்னைச் சிவப் பரம்பொருளாகவே ஆக்கி, அளவில்லாத தம்முடைய அன்பினால், இனிப் பிறவி எடுத்துவிடுவோமோ என்கின்ற எனது பயத்தை நீக்கி, என்னைத் தமது அடிமையாக ஆக்கி ஆட்கொண்டு அருளினார், குருநாதராக வந்த இறைவன்.

வரி வாரியாக

  • வரி 1

    பிறவி எடுக்கும்போது உடலில் இறைவன் வைத்து அருளிய முப்பத்தாறு தத்துவங்களையும் உடலிலிருந்து நீக்கி வைத்தான்.

  • வரி 2

    அனைத்திற்கும் மேலான பொருள் என்று வியக்கத் தகுந்த பரம்பொருளாகிய அவன், தன்னைப் போலவே அனைத்திலும் வியாபித்து இருக்கின்ற மேலான நிலைக்கு என்னைக் கொண்டு வந்தான்.

  • வரி 3

    உறுதியாக என்னைச் சிவப் பரம்பொருளாகவே ஆக்கி, அளவில்லாத தம்முடைய அன்பினால்,

  • வரி 4

    இனிப் பிறவி எடுத்துவிடுவோமோ என்கின்ற எனது பயத்தை நீக்கி, என்னைத் தமது அடிமையாக ஆக்கி ஆட்கொண்டு அருளினார், குருநாதராக வந்த இறைவன்.

திருமந்திரம் பாடல் #1608

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout