தொடர்ந்து படிக்கread this section continuously
தானென் றவனென் றிரண்டாகுந் தத்துவந்தானென் றவனென் றிரண்டுந் தனிற்கண்டுதானென் றபூவை யவனடி சாத்தினால்நானென் றவனென்கை நல்லதொன் றன்றே.
உரைmeaning
தான் என்று தனியாகவும் இறைவன் என்று தனியாகவும் இரண்டு விதமாகப் பிரித்து வைத்துப் பார்க்கின்ற தத்துவமானது, தான் என்று எண்ணப்படுகின்ற பொருளையும் இறைவன் என்று எண்ணப்படுகின்ற பொருளையும் ஆகிய இரண்டையும் தமக்குள்ளேயே கண்டு உணர்கின்றது. அவ்வாறு உணர்ந்து, தான் என்று எண்ணப்படுகின்ற பொருளாகிய ஆன்மாவை ஒரு பூவாகப் பாவித்து, தமக்குள் இருக்கின்ற இறைவனுடைய திருவடிகளில் அதைச் சாத்தி வணங்கித் தொழுதால், அடியவர் நான் என்று எதை எண்ணுகின்றாரோ அதுவே இறைவன் என்று உணர்வதே நல்லது என்பதை அன்றிலிருந்தே அவர் உணர்ந்துகொள்ளுவார்.
The principle that keeps the self apart and God apart and sees them as two separate things comes, within one's own self, to see and realize both the thing thought of as the self and the thing thought of as God. Having so realized, if one takes the soul, which is the thing thought of as the self, for a flower, and lays it at the sacred feet of the God who is within oneself, and worships there, then from that very day the devotee will realize that the good thing is to know that whatever he thinks of as I is God himself.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
தான் என்று தனியாகவும் இறைவன் என்று தனியாகவும் இரண்டு விதமாகப் பிரித்து வைத்துப் பார்க்கின்ற தத்துவம் ஒன்று உண்டு.
There is a principle that keeps the self apart and God apart and sees them as two separate things.
- வரி 2Line 2
அத்தத்துவம், தான் என்று எண்ணப்படுகின்ற பொருளையும் இறைவன் என்று எண்ணப்படுகின்ற பொருளையும் ஆகிய இரண்டையும் தமக்குள்ளேயே கண்டு உணர்கின்றது.
That principle comes, within one's own self, to see and realize both the thing thought of as the self and the thing thought of as God.
- வரி 3Line 3
தான் என்று எண்ணப்படுகின்ற பொருளாகிய ஆன்மாவை ஒரு பூவாகப் பாவித்து, தமக்குள் இருக்கின்ற இறைவனுடைய திருவடிகளில் அதைச் சாத்தி வணங்கித் தொழுதால்,
If one takes the soul, which is the thing thought of as the self, for a flower, and lays it at the sacred feet of the God who is within oneself, and worships there,
- வரி 4Line 4
அடியவர் நான் என்று எதை எண்ணுகின்றாரோ அதுவே இறைவன் என்று உணர்வதே நல்லது என்பதை அன்றிலிருந்தே அவர் உணர்ந்துகொள்ளுவார்.
then from that very day the devotee will realize that the good thing is to know that whatever he thinks of as I is God himself.
திருமந்திரம் பாடல் #1607
1 / 2





