தொடர்ந்து படிக்கread this section continuously
ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நீங்கிடும்ஞேயத்தில் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும்ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை யுற்றவராயத்தி னின்ற வறிவறி வோரே.
உரைmeaning
ஞானத்தினால் பார்க்கப்படுகின்ற ஆன்மாவைச் சிவப் பரம்பொருளாக உணர்ந்து நின்றவர்களுக்கு, தாமே சிவம் என்பதை உணர்கின்ற அந்த ஞானத்தை ஆராய்கின்ற அறிவு நீங்கிவிடும். ஞானத்தினால் பார்க்கப்படுகின்ற ஆன்மாவில் சிவப் பரம்பொருளைப் பார்க்கின்ற உருவமே, பார்க்கப்படுகின்ற அந்தப் பரம்பொருளில் முக்தி நிலை ஆகும். ஞானத்தினால் பார்க்கப்படுகின்ற ஆன்மாவாக உள்ள சிவப் பரம்பொருளில், பரம்பொருளாக இருக்கின்ற பரமாத்மாவோடு சேர்ந்திருக்கின்ற அடியவர் கூட்டத்துடன் தாமும் சேர்ந்து நிற்கின்ற அறிவை அவர்கள் அறிந்துகொள்ளுவார்கள்.
For those who stand having realized that the soul, which is what wisdom sees, is the supreme reality Siva, the intellect that examines that very wisdom by which one realizes that one is oneself Siva falls away. The form that sees the supreme reality Siva within the soul seen by wisdom is itself the state of liberation in that supreme reality which is seen. And in the supreme reality Siva that stands as the soul seen by wisdom, they will come to know the wisdom by which they too stand joined with the company of devotees who are joined with the supreme self.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஞானத்தினால் பார்க்கப்படுகின்ற ஆன்மாவைச் சிவப் பரம்பொருளாக உணர்ந்து நின்றவர்களுக்கு, தாமே சிவம் என்பதை உணர்கின்ற அந்த ஞானத்தை ஆராய்கின்ற அறிவு நீங்கிவிடும்.
For those who stand having realized that the soul, which is what wisdom sees, is the supreme reality Siva, the intellect that examines that very wisdom by which one realizes that one is oneself Siva falls away.
- வரி 2Line 2
ஞானத்தினால் பார்க்கப்படுகின்ற ஆன்மாவில் சிவப் பரம்பொருளைப் பார்க்கின்ற உருவமே, பார்க்கப்படுகின்ற அந்தப் பரம்பொருளில் முக்தி நிலை ஆகும்.
The form that sees the supreme reality Siva within the soul seen by wisdom is itself the state of liberation in that supreme reality which is seen.
- வரி 3Line 3
ஞானத்தினால் பார்க்கப்படுகின்ற ஆன்மாவாக உள்ள சிவப் பரம்பொருளில், பரம்பொருளாக இருக்கின்ற பரமாத்மாவோடு சேர்ந்திருக்கின்றவர்கள் ஒரு கூட்டமாக உள்ளனர்.
In the supreme reality Siva that stands as the soul seen by wisdom, there is a company of those who are joined with the supreme self.
- வரி 4Line 4
அத்தகைய அடியவர் கூட்டத்துடன் தாமும் சேர்ந்து நிற்கின்ற அறிவை அவர்கள் அறிந்துகொள்ளுவார்கள்.
They will come to know the wisdom by which they too stand joined with that company of devotees.
திருமந்திரம் பாடல் #1606
1 / 2





