தொடர்ந்து படிக்கread this section continuously
பேச்சற்ற வின்பத்துப் பேரானந் தத்திலேமாச்சற்ற யென்னைச் சிவமாக்கு மாள்வித்துக்காச்சற்ற சோதி கடன்மூன்றுங் கைக்கொண்டுவாச்சப் புகழ்மாளத் தாடந்து மன்னுமே.
உரைmeaning
குருநாதராக வந்த இறைவன், பேச்சே இல்லாத இன்பத்தில், பேரானந்த நிலையில் என்னை மூழ்க வைத்து, மாசு மலங்கள் எதுவும் இல்லாத என்னைச் சிவமாகவே ஆகும்படி செய்து, என்னை முழுவதுமாக ஆட்கொண்டு அருளினார். வெப்பம் இல்லாத தூய ஜோதி உருவத்தில், எம்மிடம் இருந்த மாயை, அசுத்த மாயை, சுத்த மாயை ஆகிய மூன்றையும் தம் வசமாகக் கை கொண்டார். இந்த நிலை பெற்ற எனக்கு இந்த உலகத்தில் கிடைக்கின்ற புகழ்ச்சிகளில் நான் மயங்கிவிடாமல், அந்தப் புகழ்ச்சிகள் அழிந்துபோகும்படி தனது திருவடிகளைத் தந்து அருளி, என்னை எப்போதும் நிலைபெற்று வாழும்படி செய்துவிட்டார்.
God, who came as the guru, sank me in the great bliss within a joy where there is no speech, made me, in whom no stain or impurity remained, become Sivam itself, and claimed me wholly. In the form of pure light that carries no heat, he took into his own hands the three that were in me, illusion, impure illusion and pure illusion. And so that I, having come by this state, should not be beguiled by the praises this world gives me, he gave me his sacred feet, that those praises might perish, and made me live established for ever.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
குருநாதராக வந்த இறைவன், பேச்சே இல்லாத இன்பத்தில், பேரானந்த நிலையில் என்னை மூழ்க வைத்தார்.
God, who came as the guru, sank me in the great bliss within a joy where there is no speech.
- வரி 2Line 2
மாசு மலங்கள் எதுவும் இல்லாத என்னைச் சிவமாகவே ஆகும்படி செய்து, என்னை முழுவதுமாக ஆட்கொண்டு அருளினார்.
He made me, in whom no stain or impurity remained, become Sivam itself, and claimed me wholly.
- வரி 3Line 3
வெப்பம் இல்லாத தூய ஜோதி உருவத்தில், எம்மிடம் இருந்த மாயை, அசுத்த மாயை, சுத்த மாயை ஆகிய மூன்றையும் தம் வசமாகக் கை கொண்டார்.
In the form of pure light that carries no heat, he took into his own hands the three that were in me, illusion, impure illusion and pure illusion.
- வரி 4Line 4
இந்த நிலை பெற்ற எனக்கு இந்த உலகத்தில் கிடைக்கின்ற புகழ்ச்சிகளில் நான் மயங்கிவிடாமல், அந்தப் புகழ்ச்சிகள் அழிந்துபோகும்படி தனது திருவடிகளைத் தந்து அருளி, என்னை எப்போதும் நிலைபெற்று வாழும்படி செய்துவிட்டார்.
So that I, having come by this state, should not be beguiled by the praises this world gives me, he gave me his sacred feet, that those praises might perish, and made me live established for ever.
திருமந்திரம் பாடல் #1595
1 / 2





