தொடர்ந்து படிக்கread this section continuously
கழலார் கமலத் திருவடி யென்னுநிழல்சேரப் பெற்றே னெடுமா லறியாவழல்சேரு மங்கியு ளாதிப் பிரானுங்குழல்சேரு மென்னுயிர் கூடுங் குலைத்தே.
உரைmeaning
சிலம்புகளை அணிந்துகொண்டு இருக்கும், தாமரை மலர் போன்ற திருவடிகள் என்று உணரப்படுகின்ற நிழலோடு யானும் சேர்ந்திருக்கும்படி இறைவனது திருவருளால் பெற்றேன். நீண்ட நெடும் அண்ணாமலையாக நின்று, திருமாலாலும் அறிய முடியாத மிகப்பெரும் ஜோதியோடு சேருகின்ற, எமக்குள் இருக்கின்ற ஜோதியின் உள்ளே இருக்கின்ற ஆதித் தலைவனாகிய இறைவனோடு, எமது உடலோடு சேர்ந்த தலைமுடியுடன் எமது உயிரும் சேர்ந்து, அவனோடு கூடி ஒன்றோடு ஒன்றாகச் சேர்ந்திருக்கின்றோம்.
By God's sacred grace I have come to be joined with the shade that is realized as his sacred feet, which are like lotus flowers and wear anklets. With God, the first lord who dwells within the light that is within us, that light which joins with the very great flame that stood as the long and lofty Annamalai and which even Thirumal could not know: with him our life, together with the hair that belongs to our body, has joined, and we stand united with him as one with one.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
சிலம்புகளை அணிந்துகொண்டு இருக்கும், தாமரை மலர் போன்ற திருவடிகள் என்று உணரப்படுகின்ற நிழலோடு யானும் சேர்ந்திருக்கும்படி இறைவனது திருவருளால் பெற்றேன்.
By God's sacred grace I have come to be joined with the shade that is realized as his sacred feet, which are like lotus flowers and wear anklets.
- வரி 2Line 2
நீண்ட நெடும் அண்ணாமலையாக நின்று, திருமாலாலும் அறிய முடியாத மிகப்பெரும் ஜோதி ஒன்று உண்டு.
There is a very great flame that stood as the long and lofty Annamalai and which even Thirumal could not know.
- வரி 3Line 3
அந்த ஜோதியோடு சேருகின்ற, எமக்குள் இருக்கின்ற ஜோதியின் உள்ளே ஆதித் தலைவனாகிய இறைவன் இருக்கின்றான்.
Within the light that is within us, the light which joins with that flame, dwells God, the first lord.
- வரி 4Line 4
அவனோடு, எமது உடலோடு சேர்ந்த தலைமுடியுடன் எமது உயிரும் சேர்ந்து, அவனோடு கூடி ஒன்றோடு ஒன்றாகச் சேர்ந்திருக்கின்றோம்.
With him our life, together with the hair that belongs to our body, has joined, and we stand united with him as one with one.
திருமந்திரம் பாடல் #1600
1 / 2





