திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1598

ஆறாம் தந்திரம்2. திருவடிப் பேறு

தொடர்ந்து படிக்கread this section continuously

திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்திருவடி ஞானஞ் சிறைமல நீக்குந்திருவடி ஞானந் திண்சித்தி முத்தியே.

உரை

இறைவனின் போற்றத்தக்க திருவடிகளை எம் மேல் வைத்து அருளியதால் யாம் உணர்ந்த ஞானமே, எம்மைச் சிவமாகவே ஆக்கிவிடும். அதுவே இறைவன் இருக்கின்ற இடத்திற்கு எம்மைக் கொண்டு சேர்க்கும். அதுவே எம்மை இந்த உலகச் சிறையில் வைத்திருக்கக் காரணமாகிய மலங்களை நீக்கிவிடும். அந்த ஞானத்தால் முக்தியும் எமக்கு உறுதியாகக் கிடைத்துவிடும்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனின் போற்றத்தக்க திருவடிகளை எம் மேல் வைத்து அருளியதால் யாம் உணர்ந்த ஞானமே, எம்மைச் சிவமாகவே ஆக்கிவிடும்.

  • வரி 2

    அதே ஞானமே இறைவன் இருக்கின்ற இடத்திற்கு எம்மைக் கொண்டு சேர்க்கும்.

  • வரி 3

    அதே ஞானமே எம்மை இந்த உலகச் சிறையில் வைத்திருக்கக் காரணமாகிய மலங்களை நீக்கிவிடும்.

  • வரி 4

    அந்த ஞானத்தால் முக்தியும் எமக்கு உறுதியாகக் கிடைத்துவிடும்.

திருமந்திரம் பாடல் #1598

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout