தொடர்ந்து படிக்கread this section continuously
இசைந் தெழுமன்பி லெழுந்த படியில்பசைந் திடுமீசனார் பாசத்து ளேகச்சிவந்த குருவந்து சென்னிகை வைக்கவுவந்த குருபத முள்ளத்து வந்தே.
உரைmeaning
இறையருள் சேர்ந்திருக்கின்ற மனதில் எழுகின்ற உண்மையான அன்பில் இறைவன் எழுந்து அருளியதால், அடியவரோடு ஒன்றாகச் சேர்ந்திருக்கின்ற இறைவனார், அடியவரின் பாசத் தளைகளை அவருக்குள்ளிருந்து விலகிப் போகும்படி செய்கின்றார். அருள் வடிவமான பரம்பொருளே குருவாக வந்து, அடியவரின் தலையின் மேல் தமது திருக்கைகளை வைத்து அருளுவார். அப்போது, அந்த அருளால் மகிழ்ந்திருக்கும் அடியவரின் உள்ளத்திற்குள், குருவாக வந்திருக்கும் இறைவனின் திருவடிகள் வந்து வீற்றிருக்கும்.
Because God has risen and given his grace within the true love that rises in a mind where his grace has gathered, God, who stands joined as one with the devotee, makes the bonds of attachment move away and depart from within him. The supreme being, whose very form is grace, comes as the guru and lays his sacred hands upon the devotee's head. Then, within the heart of the devotee who rejoices in that grace, the sacred feet of God who has come as the guru come and are seated.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறையருள் சேர்ந்திருக்கின்ற மனதில் எழுகின்ற உண்மையான அன்பில் இறைவன் எழுந்து அருளுகின்றான்.
God rises and gives his grace within the true love that rises in a mind where his grace has gathered.
- வரி 2Line 2
அதனால், அடியவரோடு ஒன்றாகச் சேர்ந்திருக்கின்ற இறைவனார், அடியவரின் பாசத் தளைகளை அவருக்குள்ளிருந்து விலகிப் போகும்படி செய்கின்றார்.
Because of this, God, who stands joined as one with the devotee, makes the bonds of attachment move away and depart from within him.
- வரி 3Line 3
அருள் வடிவமான பரம்பொருளே குருவாக வந்து, அடியவரின் தலையின் மேல் தமது திருக்கைகளை வைத்து அருளுவார்.
The supreme being, whose very form is grace, comes as the guru and lays his sacred hands upon the devotee's head.
- வரி 4Line 4
அப்போது, அந்த அருளால் மகிழ்ந்திருக்கும் அடியவரின் உள்ளத்திற்குள், குருவாக வந்திருக்கும் இறைவனின் திருவடிகள் வந்து வீற்றிருக்கும்.
Then, within the heart of the devotee who rejoices in that grace, the sacred feet of God who has come as the guru come and are seated.
திருமந்திரம் பாடல் #1590
1 / 2





